இந்த டிஜிட்டல் உலகிலும் மணமக்களின் சம்மந்தம் இல்லாமல் நடக்கும் கட்டாய கல்யாணங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றது என்று தன் கூறவேண்டும். இந்நிலையில் அண்டை நாடான இந்தியாவில் உள்ள ஆந்திராவில் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள அனாகபள்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் தான் விஞ்ஞானியாக பணிபுரியும் ராமாநாயுடு. ஹைதராபாதில் உள்ள CSIR நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவருக்கும் ராதிகா மாட்டம் என்ற கிராமத்தை சேர்ந்த புஷ்பா என்ற பெண்ணுக்கு அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும் அவர்களது திருமணம் வரும் மே 26ம் நடைபெறும் என்று தேதி குறிக்கப்பட்டது.
ஆனால் இந்த திருமணத்தில் புஷ்பாவிற்கு விருப்பம் இல்லை என்றபோது, மாப்பிள்ளை நல்ல வேலையில் உயர் பதவியில் இருப்பதால் அவரை தான் திருமணம் செய்யவேண்டும் என்று புஷ்பாவின் பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் நிச்சயம் முடிந்த சில நாட்களுக்கு பிறகு புஷ்பாவின் பெற்றோர் உறவினர்களுக்கு பத்திரிகை வைக்க வெளியூர் சென்றுள்ளனர்.
இந்த சமயத்தில் தான் மணமகன் ராமாநாயுடுவிற்கு புஷ்பா போன் செய்து உங்களுக்கு ஒரு Surprise பரிசு காத்திருக்கிறது ஆகவே வீட்டிற்கு வாருங்கள் என்று கூறியுள்ளார். மணமகனும் ஆசையோடு புஷ்பா வீட்டிற்கு வர இருவரும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்
பின் இந்த சந்தோஷமான நிகழ்வை கேக் வெட்டி நாம் கொண்டாட வேண்டும் என்றும் கூறி, இருவரும் கேக் வெட்டி உண்டு மகிழ்ந்துள்ளனர். இறுதியில் உங்களுக்கு பரிசு ஒன்று தரப்போகிறேன் ஆகையால் நீங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் புஷ்பா. இறுதியில் தன் துப்பட்டாவால் அவரது கண்களையும் காட்டியுள்ளார்.
அவர் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் புஷ்பா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவருடைய கழுத்தை அறுத்துள்ளார். மணமகன் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு அடிக்க பயந்துபோன புஷ்பா அருகில் இருந்த மருத்துவமனையில் அவரை சேர்த்து, கீழே தவறி விழுந்தபோது கத்தி கிழித்துவிட்டது என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
சந்தேகமடைந்த மருத்துவர்கள் உடனே போலீசில் தகவல் அளிக்க, மணமகனும் நடந்ததை கூற தற்போது புஷ்பா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மணமகன் ராமாநாயுடு தற்போது மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.