TamilSaaga

‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட்’ – இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த பிரான்ஸ்

அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தான் இந்திய தயாரிப்பு தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட இந்தியர்களை தங்கள் நாட்டிற்குள் வர அனுமதி அளித்துள்ளது பிரான்ஸ் நாடு. மேலும் இந்த முடிவு ஞாயிற்று கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதே நேரத்தில், டெல்டா வகை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும், மருத்துவமனைகளைப் பாதுகாக்கவும் பிரான்ஸ் எல்லையில் சோதனைகளை பிரான்ஸ் அரசு கடுமையாக்குகிறது என்று பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கடந்த சனிக்கிழமை தெரிவித்தார்.

பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்கனவே இந்திய தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது, குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஆபிரிக்காவில் இந்த நடைமுறை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் விதிக்கப்பட்டுள்ள மாறுபட்ட விதிகள் பயணத்தை சற்று சிக்கலாக்கியுள்ளன என்பதும் நிதர்சனமான உண்மை.

மேலும் சீனா மற்றும் ரஷ்ய தடுப்பூசிகளை பிரான்ஸ் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகல், நெதர்லாந்து, கிரீஸ் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளிலிருந்து தடுப்பூசி போடாதவர்கள் பிரெஞ்சு எல்லைகளை கடக்க, 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் எடுக்கப்பட்ட பெருந்தொற்று நெகடிவ் சோதனையை முன்வைக்க வேண்டும் என்று பிரான்ஸ் அரசு கூறியுள்ளது.

Related posts