TamilSaaga

தோஹாவில் இருந்து புதுக்கோட்டைக்கு Flight விடும் “செந்தில் குமார்”.. விஜய் சேதுபதியே ‘வணக்கம்” வைக்கும் அசுர வளர்ச்சி – வெளிநாட்டு ஊழியர்கள் கொண்டாடும் வாய்வித்தை “Celebrity”

குடும்பத்தைப் பிரிந்து நொந்து போய் வேலை செய்து கொண்டிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களை, அவர்களின் ஓய்வு நேரத்தில் சற்று இளைப்பாற வைத்துக் கொண்டிருக்கிறார் இந்த செந்தில் குமார்.

தோஹாவில் இருந்து காரைக்குடி, அறந்தாகி, புதுக்கோட்டை என்று வாயில் அந்த ஊர் பேரையெல்லாம் அடிச்சிவிட்டு பேசும் இவரது வட்டார மொழிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

டிக்டாக்-கில் பலரும் தங்களது தனித்திறமையை காட்டிக் கொண்டிருக்க, சிலர் ‘தனியாக’ தங்கள் திறமையை காட்டிக் கொண்டிருக்க, இவர் தனது வட்டார மொழி வழக்கை மட்டுமே முதலீடு செய்து பிரபலமடைந்துள்ளார். தோஹாவில் டிரைவராக பணிபுரியும் செந்தில் குமாரின் சொந்த ஊர் புதுக்கோட்டை.

சில நேரங்களில் எமோஷனலாகவும், பல நேரங்களில் காமெடியாகவும் பேசுவதே இவரது வெற்றிக்கான ஃபார்முலா. அதனை மிகச் சரியாக Balance செய்கிறார். சமீபத்தில் இவர் தனது வீடியோவில் ‘தங்கையின் கல்யாணத்துக்கு வாங்கிய கடனால், கல்யாணத்துக்கு போக முடியவில்லை. என் பிள்ளைகளின் காதணி விழாவுக்கு வாங்கிய கடனால் காது குத்துக்கும் போக முடியவில்லை.. என்னடா இது வெளிநாட்டு வாழ்க்கை” என்று உருக்கமுடன் இவர் பேசிய வீடியோவுக்கு மிக அதிகமான ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

மறுநாளே தனது வழக்கமான ஸ்டைலில் ஒரு காமெடியான வீடியோவும் போடுகிறார். இதனால், வெளிநாட்டு ஊழியர்கள் இவருடன் எளிதில் Connect ஆகிவிடுகின்றனர். தற்போது ஒரு செலிப்ரிட்டியாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் செந்தில் குமாருக்கு, நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாங்கிய கடன், குடும்ப சூழல் என்று பல காரணங்களுக்கு வெளிநாட்டுக்கு வேலைக்கு வந்தாலும், இன்று தனக்கான பாதையை தானே வடிவமைத்துக் கொண்டிருக்கிறார். தனது திறமையை கண்டறிந்து அதனை தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறார். புதுக்கோட்டையில் சம்பாதிக்க முடியாத பேரையும், பெருமையையும் இன்று தோஹாவில் சம்பாதித்து வருகிறார். நம் வாழ்க்கை நம் கையில் தான் உள்ளது என்பதை மீண்டும் செந்தில் குமார் மூலம் இயற்கை நமது தெரியப்படுத்துகிறது என்பதே நாம் இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்.

உயரம் தொட ‘தமிழ் சாகா சிங்கப்பூர்’ சார்பாக வாழ்த்துகள் Mr. செந்தில் குமார்!

Related posts