TamilSaaga

சிங்கப்பூரில் “மிகவும் ஊக்கமளிக்கும் தமிழ் ஆசிரியர்கள்” : விருது வழங்கி கௌரவித்த அமைச்சர் சான் சங் சிங்

“மாணவர்களின் கல்விப் பயணத்தில் நம் தாய் மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம்” என்று MITT எனப்படும் Most Inspiring Tamil Teachers விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய சிங்கப்பூரின் கல்வித்துறை அமைச்சர் Chan Chun Sing தெரிவித்துள்ளார். இந்த விழாவில் பங்கேற்று பேசிய பிறகு தனது முகநூல் வழியாக அவர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில் “ஒரு மொழியியல் திறன்களைப் பெறுவதற்கு முன்னாள், இந்த மொழிகளைப் படிப்பது நமது வளமான பாரம்பரியத்தை பரப்புகிறது மற்றும் நமது கலாச்சாரங்கள் மற்றும் நாம் யார் என்பதை நமக்கு ஆழமாகப் புரியவைக்கிறது என்பதை நாம் அறியவேண்டும்”. “வேகமான வளரும் இந்த டிஜிட்டல் உலகில் நமது நம்மவர்களுக்கு இது அதிக நன்மைகளை பயக்கும்” என்றார் அவர்.

கல்வி அமைச்சர் சான் சங் சிங் அவர்களின் முகநூல் பதிவு

“நமது பாராளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் அவர்களுடன் இணைந்து நான் இந்த MITT எனப்படும் Most Inspiring Tamil Teachers விருது வழங்கும் விழாவில் பங்கேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது”. தமிழ் முரசு, சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ் மொழி கற்றல் மற்றும் ஊக்குவிப்பு குழு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. “இந்த விருது, புதுமையான கற்பித்தல் உத்திகளை ஏற்றுக்கொண்ட, தமிழ் கல்வியின் மகிழ்ச்சியை ஊக்குவித்த நமது கல்வியாளர்களின் சிறந்த செயல்திறனை பாராட்டி அளிக்கப்படுகின்றது” என்று அவர் கூறினார்.

5 MITT விருதுகளைத் தவிர, சிறந்த NIE பயிற்சி ஆசிரியர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் இந்த பரிசளிப்பு விழாவில் வழங்கப்பட்டன. இந்த விழாவின்போது ஆசிரியர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டது. வில், உமர் புலவர் தமிழ் மொழி மையத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிங்கப்பூரின் நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஆசிரியர்களை வாழ்த்தி பாடினார்கள். இதில் நம் நாட்டுக்கு மிகவும் பிடித்த தேசிய நாள் பாடல், “ஹோம்” மற்றும் மலாய் நாட்டுப்புற பாடல் “சான்” மாலி சான் “. ஆகியவை பாடப்பட்டது.

“தாய் மொழியைக் கற்றுக்கொள்வதில் ஆர்வத்தையும், அந்த ஆர்வத்தை தூண்டுவதற்கும், நம் கலாச்சாரம் மற்றும் மரபுகளை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல பாடுபடும் நமது கல்வியாளர்களை தொடர்ந்து ஆதரிப்போம்” என்றார் அவர்.

Related posts