TamilSaaga

முதன்முறையாக பிக்பாஸில் பங்கேற்கும் சிங்கப்பூர் பெண்.. ஆரியை மிஞ்சும் நேர்மை – டைட்டில் ஜெயித்து சிங்கையை பெருமைப்பட வைக்கப்போகும் “பொக்கிஷம்”!

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 இன்று (அக்.9) பிரம்மாண்டமாக துவங்கவிருக்கிறது. விக்ரம் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு, மீண்டும் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார் கமல்ஹாசன்.

விக்ரம் வெற்றிக்குப் பிறகு, மீண்டும் சினிமாவில் பிசியாகி இருக்கும் கமல்ஹாசன், இம்முறை பிக்பாஸ் ஷோவை தொகுத்து வழங்க மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில், ‘நானாவது பிகபாஸ விட்டு போறதாவது’ மோடில் மீண்டும் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இன்று சீசன் 6-ன் துவக்க விழா ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை உட்பட 20 பேர் பங்கேற்றுள்ளனர்.

பக்கத்து வீட்டில் நடக்கும் சண்டை, அடிதடி போன்றவற்றை எட்டிப்பார்க்கும் ஃபார்முலா தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஹைலைட். அதுவும் 100 நாட்களுக்கு இப்படி எட்டிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால்…!! அதைத் தான் இந்த ஷோ செய்து வருகிறது. போட்டியாளர்கள் போடும் சண்டை, அவர்களுக்குள் உள்ள ஈகோ, மோதல், கூட்டு சேர்ந்து கொண்டு புறம் பேசுவது, அன்பு, காதல், துரோகம் என்று அனைத்து சமாச்சாரங்களும் இதில் உண்டு.

மேலும் படிக்க – சிங்கப்பூர் to தமிழகம்… சூப்பரான ஆஃபரை அறிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் – மிகக் குறைந்த விலையில் டிக்கெட் கட்டணம்

ஒரு சிலரைத்தவிர, புதுமுகங்கள் இந்த முறை கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் முதன் முதலாக சிங்கப்பூரைச் சேர்ந்த மாடல் நிவாஷினி பிக்பாஸ் ஷோவில் பங்கேற்கிறார். இவர் நமது சிங்கையில் டிஜிட்டல் மீடியாவில் செயல்பட்டு வருகிறார்.

இவர் உன்னை கண் தேடுதே வெப் சீரிஸிலும், பல்வேறு விளம்பரங்களிலும் நடித்துள்ளார். ஆடிஷனில் பங்கேற்று அதில் தேர்வு செய்யப்பட்டு, பிக்பாஸ் வீட்டிற்குள் நிவாஷினி நுழைந்துள்ளார்.

நிவாஷினியை பொறுத்தவரை, அவரது நெருங்கிய நண்பர்களிடம் பேசிய பொழுது, அவர் மிகவும் நேர்மையான பெண் என்று கூறியுள்ளனர். எதையும் முகத்துக்கு நேரே பேசும் பழக்கம் கொண்டவர் என்றும், தன் உயிர் நண்பர் தவறு செய்தாலும், அதை தயக்கமின்றி முன்வைக்கும் பெண் என்றும் கூறியுள்ளனர்.

நேர்மையின் அடையாளமாய் கடந்த நான்காவது சீசனில் டைட்டில் வென்ற ஆரியின் லேடி வெர்ஷன் இவர் என்றும் கூறியுள்ளனர்.

அப்போ, சிங்கப்பூருக்கு ஒரு பிக்பாஸ் டைட்டில் பார்சல் பண்ணிடலாம் போலயே!!

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts