TamilSaaga

சிங்கப்பூர் டாக்ஸி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் : கூடுதலாக 30 மில்லியன் வெள்ளி ஆதரவு திட்டம் அறிவிப்பு

சிங்கப்பூரில் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 22) தொடங்கிய, ஒரு மாத கால இரண்டாம் கட்ட உயர்மட்ட எச்சரிக்கை காலகட்டத்தில், டாக்ஸி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் அரசாங்கத்திடமிருந்து கூடுதலாக 30 மில்லின் டாலர் வெள்ளி அளிக்கப்பட்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த தொகை தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களை ஆதரிப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பரில் மாதத்தில் அமைக்கப்பட்ட கொரோனா டிரைவர் நிவாரண நிதியை சென்றடையும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிதி தற்போது ஓட்டுநர்களுக்கு இந்த ஆண்டு ஜூலை முதல் 60 நாட்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வாகனத்திற்கு10 டாலர், மற்றும் அடுத்த 30 நாட்களுக்கு ஒரு வாகனத்திற்கு 5 டாலர் என்ற விகிதத்தில் வழங்குகிறது.

மேலும் தகுதியான ஓட்டுநர்கள் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 31 வரை ஒரு நாளுக்கு கூடுதலாக 10 டாலர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் ஒரு வாகனத்திற்கு 5 டாலர் கூடுதலாக பெறுவார்கள்.

மேலும், தற்போது COVID-19 டிரைவர் நிவாரண நிதியின் மூலம் பணம் பெற்றுவரும் அனைத்து டாக்ஸி மற்றும் தனியார் வாடகை ஓட்டுநர்களும் தங்களது ஆபரேட்டர்கள் மூலம் கூடுதல் கொடுப்பனவுகளை தானாகவே பெறுவார்கள் என்றும் LTA தெரிவித்துள்ளது.

Related posts