TamilSaaga

கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்காதீர் : நடிகர் சூர்யாவின் காட்டமான ட்வீட்

சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல… என்று பிரபல நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார். இந்தியாவில் மத்திய அரசு ஏற்கனவே வேளான் திருத்தச்சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களி வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிதாக சினிமாடோகிராபர் ஆக்ட் 2021 என்று புதிய சட்டத்தை முன்மொழிந்துள்ளது மத்திய அரசு.

இதுகுறித்து சூர்யா வெளியிட்ட அறிக்கையில் திரைப்பட சகோதரத்துவத்திற்கு மற்றொரு அடியாக, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஒளிப்பதிவாளர்களுக்கான சட்டத்தில் புதிய திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.

இதன் கீழ் தணிக்கை வாரியத்தால் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட படங்களின் சான்றிதழை ரத்து செய்யவோ அல்லது திரும்பபெறவோ மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், புரோகிராமர்கள், மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்கள் என, முன்மொழியப்பட்ட மசோதாவின் பல்வேறு பிரிவுகளின் கருத்துகளுக்கு மேலதிகமாக, இந்த கவலைகளை எடுத்துரைக்கும் வகையில் ஐ & பி அமைச்சகத்திற்கு ஒரு பதிலை உருவாக்கியுள்ளோம். கடிதம் மற்றும் கீழேயுள்ள ஹைப்பர்லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விரிவான கருத்துகளை தயவுசெய்து அடுத்தகட்டத்துக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் இந்த புதிய கொள்கை படைப்பாளிகளின் கருத்து சுகந்திரத்தை பறிக்கும் வண்ணம் உள்ளதாக நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

Related posts