TamilSaaga

சிங்கப்பூரில் மில்லியன் கணக்கில் நடக்கும் பணமோசடி : 334 பேரிடம் நடக்கும் கிடுக்குபிடி விசாரணை

சிங்கப்பூரில் அண்மைகாலமாக மோசடி கும்பல்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர் முழுவதும் சட்ட அமலாக்க துறையினர் நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கையில் பண மோசடி தொடர்பாக 334 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கி நேற்று ஜூன் 2 வரை நடத்தப்பட்ட இரண்டு வார சோதனையில் வர்த்தக குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையின் 7 பிரிவுகளும் சோதனை நடத்தியுள்ளது. இது தொடர்பாக மொத்தம் 872 புகார்கள் பெறப்பட்டுள்ளது.

வர்த்தக மின்னஞ்சல் முகவரி மோசடி, தொழில்நுட்ப ஆதரவு மோசடி, இணைய காதல் மோசடி, என்ற பல்வேறு குற்றச்செயல்களில் சுமார் 9 மில்லியன் வெள்ளிக்கு மேல் மக்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் அண்மைக்காலமாக மோசடி கும்பல்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மோசடி கும்பல்களை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

Related posts