TamilSaaga

சிங்கப்பூரில் Dormitoryயில் மேலும் 412 பேருக்கு தொற்று : தீவில் மேலும் நால்வர் மரணம் – ஒரே நாளில் 2,356 பேர் பாதிப்பு

சிங்கப்பூரில் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் தொற்று அதிகரித்து வந்த நிலையில் நேற்று சற்று தணிந்துள்ளது. சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 2) நண்பகல் நிலவரப்படி 2,356 புதிய தொற்று வழக்குகளைப் பதிவுசெய்தது. இது தொற்றுநோய் சிங்கப்பூரில் தொடங்கியதிலிருந்து மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 1,00,000ஐ தாண்ட வைத்துள்ளது. அதே போல தொற்று பாதிப்பால் நாட்டில் மேலும் 4 பேர் மரணித்துள்ளார் என்பது வேதனை தரும் செய்தியாக உள்ளது.

மரணித்த அந்த நால்வரும் சிங்கப்பூரர்கள் – 55 முதல் 80 வயதுக்குட்பட்ட மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆவர். அவர்கள் அனைவருக்கும் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்படவில்லை மற்றும் பல்வேறு அடிப்படை மருத்துவ குறைபாடுகள் அவர்களுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை தீவில் 107 பேரை இந்த பெருந்தொற்று பலிவாங்கியுள்ளது.

நேற்று சனிக்கிழமை பதிவான புதிய வழக்குகளில், 2,350 உள்நாட்டில் பரவும் நோய்த்தொற்றுகள், இதில் சமூகத்தில் 1,938 வழக்குகள் மற்றும் 412 தங்குமிட குடியிருப்பாளர்கள் உள்ளனர். மேலும் இந்த வழக்குகளில் 60 வயதிற்கு மேற்பட்ட 513 முதியவர்கள் உள்ளனர் என்று MOH தனது தினசரி பதிப்பில் நேற்று இரவு 11 மணியளவில் ஊடகங்களுக்கு தெரிவித்தது. அதேசமயம் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒன்பது தங்குமிடங்கள் மற்றும் பசீர் பஞ்சாங் மொத்த விற்பனை மையம் உட்பட 13 இடங்களில் உள்ள கிளஸ்டர்களை தற்போது “நெருக்கமாக கண்காணித்து வருவதாக” MOH தெரிவித்துள்ளது. டோ பயோ/கிம் கீட் அவென்யூ தங்கும் விடுதியும் தொற்று குழுமமாக நேற்று சனிக்கிழமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த விடுதியில் தற்போது 22 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் உள்ளன. ப்ளூ ஸ்டார்ஸ் டார்மிட்டரி கிளஸ்டரில் மேலும் 41 வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன, இது தற்போது மிகப்பெரிய செயலில் உள்ள கிளஸ்டராக உள்ளது. இரண்டாவது பெரிய விடுதி கிளஸ்ட்டராக “ஏவரி லாட்ஜ் கிளஸ்டர்” உள்ளது அங்கு 18 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளது.

Related posts