TamilSaaga

Exclusive : “உயிரிழந்த தொழிலாளி ராஜேந்திரன்” : Air India Express மூலம் திருச்சி கொண்டுசெல்லப்பட்ட உடல் – சோகத்தில் உறவுகள்

குடும்ப சூழ்நிலையை கருதி தனது குடும்பத்தை காத்திட நமது சிங்கப்பூர் போன்ற பல வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்களின் நிலை, தற்போது உலகெங்கும் பரவி வரும் இந்த வைரஸ் நோயால் ஒருபுறம் கொடூரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில். வேலை செய்யும் இடங்களிலும் பொது இடங்களிலும் நிகழ்விலும் விபத்துகளில் இறக்கும் தொழிலாளர்களின் உடல்களை மீண்டும் தாயகம் கொண்டு செல்வதும் ஒரு சவாலான விஷயமாகவே தற்போது மாறியுள்ளது. தமிழகத்தில் இருந்து வேலைக்காக வெளிநாடு செல்பவர்களில் சிலர் துரதிஷ்டவசமாக இறக்கும் தருவாயில் அவர்களது உடல் உரிய ஆவணங்கள் பூர்த்திசெய்யப்ட்டு தமிழகம் கொண்டுசெல்லப்படும்.

இதையும் படியுங்கள் : “குப்பை நகரம் என்றவர்கள் முன் வாழ்ந்து காட்டும் நாடு” : விதியை மாற்றி விஸ்வரூபம் எடுத்த சிங்கப்பூர் – சாதித்தது எப்படி?

அதிலும் குறிப்பாக அண்டை நாடான இந்தியாவின் தமிழகத்தில் உள்ள திருச்சி விமான நிலையத்திற்கு இது போன்று வெளிநாடுகளில் இறக்கும் தொழிலாளர்கள் மற்றும் பிற குடிமக்களின் உடல்கள் கொண்டுசெல்லப்படுகிறது. வெளிநாடு சென்று எனது குடும்பத்தை காக்கப்போகிறேன் என்ற சந்தோஷ உள்ளங்கள் பலவற்றை கண்டுள்ள அதே திருச்சி விமான நிலையம். இறந்தவர்களின் உடலுக்காக காத்திருக்கும் பல இறுக்கமான நெஞ்சங்களின் அழுகையயும் பார்த்துகிறது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் இன்று ஜனவரி 8ம் தேதி காலை 6.30 மணியளவில் துபாயில் உயிரிழந்த ஒரு தொழிலாளியின் உடல் தாயகம் திருச்சி கொண்டுவரப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை நகரை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ராஜேந்திரன் என்பவர் துபாயில் பணி செய்து வந்த நிலையில் அவர் காலமானார். இந்நிலையில் துபாய் அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் முயற்சியால் தற்போது அவரது உடல் IX612 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலமாக இன்று காலை 6.30 மணிக்கு திருச்சி கொண்டுவரப்பட்டது. தற்போது அவரது உடல் அவரது சொந்த ஊரான பட்டுக்கோட்டைக்கு தற்போது கொண்டுசெல்லப்படவுள்ளது. ராஜேந்திரன் எப்படி இறந்தார் என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இதையும் படியுங்கள் : “அதிகரிக்கும் Omicron வழக்குகள்” : சிங்கப்பூரால் இதை கையாள முடியுமா? – சுகாதார அமைச்சகம் சொல்வதென்ன?

ஆனால் இது ஒரு தொடர் கதையாகவே மாறியுள்ளது. சில மாதங்களுக்கு முன்புகூட பொன்னமராவதி தாலுகாவிற்கு உட்பட்ட எம். உசிலம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க ஆனந்தன் என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக டிரைவராக பணியாற்றி வந்து நிலையில் அங்கு காலமானார். அவரது உடலை தாயகம் கொண்டுவர முடியாமல் அவரது மனைவி மற்றும் உரணவினர்கள் அரசின் உதவியை நாடியது நினைவுகூரத்தக்கது.

News Source : நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts