TamilSaaga

“விபத்தில் இறந்த தொழிலாளி ஆனந்தன்” : உடலை சொந்த ஊர் கொண்டுவர முடியாமல் தவிக்கும் மனைவி

தனது குடும்ப சூழ்நிலையை கருதி குடும்பத்தை காத்திட வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்களின் நிலையில் தற்போது உலகெங்கும் பரவி வரும் இந்த வைரஸ் நோயால் ஒருபுறம் கொடூரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், வேலை செய்யும் இடங்களிலும் பொது இடங்களிலும் நிகழ்விலும் விபத்துகளில் இறக்கும் தொழிலாளர்களின் உடல்களை மீண்டும் தாயகம் கொண்டு வருவது ஒரு சவாலான விஷயமாகவே தற்போது மாறியுள்ளது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட உடல்

தற்போது இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது சவுதி அரேபியாவில் வேலை செய்துவந்த என்பவரின் பரிதாப நிலை. பொன்னமராவதி தாலுகாவிற்கு உட்பட்ட எம். உசிலம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் 37 வயது மதிக்கத்தக்க ஆனந்தன். இவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இளஞ்சியம் என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி சவுதி அரேபிய நாட்டில் நடந்த ஒரு வாகன விபத்தில் நிகழ்விடத்திலேயே ஆனந்தன் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அறிந்த ஆனந்தனின் குடும்பத்தினர் பேரதிர்ச்சி கொண்டதோடு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக ஆனந்தனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர போராடி வருகின்றனர். ஆனந்தனின் உடலை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது மனைவி இளஞ்சியம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளது பலரின் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. சொந்த வீட்டின் நிதி நிலைமையை உயர்த்த வெளிநாடுகளுக்கு சென்று தனிமையில் வாடி கஷ்டப்பட்டு உழைக்கும் ஆனந்தன் போன்ற பல தொழிலாளர்களின் இந்த அவல நிலை ஒரு தொடர்கதையாகவே மாறியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்த குமரவேல் ராஜா என்ற நபர் நிகழ்விடத்திலேயே இறந்து அதன்பிறகு அவரது உடல் திருச்சி விமான நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை கழக செயலாளர் துறை வைகோ தனது டுவிட்டர் பக்கத்தில் அப்போது வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

மேலும் இது போன்ற தொழிலாளர்களின் உடல்கள் அவ்வப்போது துபாய், சிங்கப்பூர், சவுதி போன்ற நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கிறது என்று நமது தமிழ் சாகா சிங்கப்பூருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் கிடைத்துவருகின்றது.

Related posts