TamilSaaga

“Portugal to Singapore” : ஆச்சர்யமூட்டும் நீண்ட நெடும் 21 நாள் ரயில் பயணம் – எத்தனை கிலோமீட்டர் தெரியுமா?

வளர்ந்து வரும் அதிவேக தொழில்நுட்பத்தின் காரணமாக இந்த உலகமே ஒரு சிறிய கிராமம் போல சுருங்கி விட்டது.பயணிக்கும் நேரத்தை வைத்து , பயணிக்கும் முறையை தீர்மானிக்கும் இந்த நூற்றாண்டின் மக்கள், அதிகம் விரும்புவது விமான சேவைகளையும் அல்லது கார் போன்ற இதர வாகன சேவைகளையும் தான்.

இதையும் படியுங்கள் : “இணைய வழியில் காதல் மோசடி உள்பட பல குற்றங்கள்”

இந்த சூழலில்தான் Boten-Vientiane ரயில்வே டிசம்பர் 2, 2021 அன்று திறக்கப்பட்டது. சுமார் 18,755 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயிலிலேயே பயணிப்பது என்பது ஒரு சாதாரண விஷயமில்லை. இந்த பயணத்தின் போது மக்கள் ஸ்பெயின், போலந்து, பெலாரஸ், ​​மங்கோலியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் மலேசியா உள்ளிட்ட 13 வெவ்வேறு நாடுகளுக்கு பயணிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

சீனாவின் குன்மிங்கை லாவோஸின் தலைநகரான வியன்டியானை இணைக்கும் போடென்-வியன்டியன் இரயில்வே என அழைக்கப்படும் புதிய பாதை லாவோஸில் சமீபத்தில் திறக்கப்பட்டதன் காரணமாக மட்டுமே சாத்தியமானது.பயணக் கணக்கீடுகளில் உதவிய ஒரு ரயில் நிபுணரான seat61.com இன் மார்க் ஸ்மித்தின் கருத்துப்படி, பயணத்தை முடிக்க சுமார் 21 நாட்கள் ஆகும்.

இதில் விசா போன்ற ஆவணங்களைச் செயலாக்குவதற்குத் ஏதுவாக ஒரே இரவில் பல நிறுத்தங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். சில நேரங்களில், சில இணைப்பு ரயில்களில் ஏறுவதற்காக நிலையங்களை விட்டு வெளியேறும் நிலையும் ஏற்படலாம். பல்வேறு நகரங்கள் வழியாகப் பயணித்து, அடுத்த ரயில் நிலையத்திற்குச் செல்ல செல்ல வேண்டிய சூழலும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மொத்தத்தில், ரயில் டிக்கெட்டுகளுக்கு மட்டும் நீங்கள் செலவழிக்க வேண்டிய தொகை சுமார் US$1,350 ஆகும்.

இயற்கை சூழலை நேசிப்பவர்களுக்குக்கு இது ஒரு சிறந்த செய்தியாக இருக்கும்.. போர்ச்சுகலில் இருந்து சிங்கப்பூருக்குப் பறப்பதைக் காட்டிலும் குறைவான கார்பன் தடம் இந்தப் பயணத்தின் மூலம் நமக்கு கிடைக்கும்.எடுத்துக்காட்டாக, போர்ச்சுகலின் லிஸ்பனில் இருந்து சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு நீங்கள் விமானத்தில் சென்றால், நீங்கள் 1.67 டன் CO2 உமிழ்வுக்கு பங்களிப்பீர்கள்.

இந்த ரயிலில் பயணம் செய்வதால் 0.08 டன் CO2 மட்டுமே கிடைக்கும். இந்த இரயில் பயணம் தேவைதானா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். தற்சமயம், கோவிட்-19 தொற்றுநோயால் சில எல்லைக் கட்டுப்பாடுகள் இருப்பதால், இந்தப் பயணம் இந்த சூழலில் சாத்தியமில்லை. குறிப்பாக, கோவிட்-19 காரணமாக இடைநிறுத்தப்பட்ட போர்ச்சுகலின் லிஸ்பனில் இருந்து பிரான்சின் ஹெண்டே வரையிலான ஒரு குறிப்பிட்ட ரயில் பாதையும் இதில் அடங்கும்.

இந்த நம்பமுடியாத நீண்ட ரயில் பயணத்தை மேற்கொள்ள ஆவலோடு காத்திருக்கும் மக்கள், பயணக் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் நாள் விரைவில் வரும் என்று எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts