TamilSaaga

“குப்பை நகரம் என்றவர்கள் முன் வாழ்ந்து காட்டும் நாடு” : விதியை மாற்றி விஸ்வரூபம் எடுத்த சிங்கப்பூர் – சாதித்தது எப்படி?

ஒரு காலத்தில் குப்பை நகரம் என்றார்கள், ஆனால் இன்று உலக அளவில் சுமார் 196 நாடுகள் உள்ள நிலையில் அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடுகளின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது நம்ம சிங்கப்பூர். 11வது நூற்றாண்டில் அன்றைய சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை ஆட்சி செய்த விஜய சம்பிராஜ்யத்தை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியதாம் சோழ பரம்பரை. ஆம் நமது சோழர்கள் ஆட்சி செய்த இடங்களில் சிங்கப்பூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு காலப்போக்கில் மலாக்கா சுல்தான்கள், அதனை தொடர்ந்து ஆங்கிலேயர் என்று பலர் நமது சிங்கப்பூரை ஆட்சி செய்துள்ளனர். இறுதியில் 1963ம் ஆண்டு மலேசியா மற்றும் சிங்கப்பூர் இரண்டிற்கும் விடுதலை கிடைக்க, Federation of Malaysia என்ற கட்டமைப்பில் இரு நாடுகளும் இணைந்தது.

இதையும் படியுங்கள் : “அதிகரிக்கும் Omicron வழக்குகள்” : சிங்கப்பூரால் இதை கையாள முடியுமா? – சுகாதார அமைச்சகம் சொல்வதென்ன?

இந்நிலையில் தான் 1964ம் ஆண்டு மலேசியாவில் இருந்த மலாய் மக்களுக்கும் சிங்கப்பூரில் இருந்த சீன மக்களுக்கும் இடையே கோஷ்டி தகராறுகள் தொடங்கியது. அன்றைய காலகட்டத்தில் முற்றிலும் மலேசியாவை நம்பியே வாழ்க்கையை நகர்த்திய சிங்கப்பூரை 1965ம் ஆண்டு வெட்டிவிட்டது மலேசியா. வறட்சியில் மூழ்கி ஒரு குப்பை நகரமாக மாறியது சிங்கப்பூர், ஆனால் குப்பையை சுத்தம் செய்ய ஒருவர் வந்திருக்க வேண்டுமல்லவா? ஆம் ஒருவர் வந்தார்.. நின்றார்.. சரித்திரம் படைத்தார்.. அவர்தான் உலகே இன்று சிங்கப்பூரை திரும்பிப்பார்க்க வைத்த அந்த மாமனிதன் சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ.

அன்றைய காலகட்டத்தில் சிங்கப்பூரும் சிங்கப்பூரர்களும் அனுபவித்த பெரும் தடை வேலையின்மையும், தங்குமிடங்களும் தான். இதனை முறையாக கையாண்டதால் தான் இன்று சிங்கப்பூர் அவ்வளவு பெரிய உயரத்தில் உள்ளது. லீ குவான் தனது முன்னெடுப்புகளில் ஒன்றாக களமிறக்கியது தான் HDB எனப்படும் Housing Development Board. சிங்கப்பூரில் வாழும் மக்களுக்கு என்று வீடுகள் HDB மூலம் கட்டப்பட்டு அவர்கள் அங்கு தங்கவைக்கப்பட்டனர். விளங்கச்சொன்னால் சிங்கப்பூரில் இன்று சுமார் 80 சதவிகித நிலம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது சொந்த வீடுகள் இல்லாத மக்களே இல்லை என்றும் கூட கூறலாம் அதிலும் 100க்கு 95 பேர் அரசு அளிக்கும் வீடுகளில் தான் வசிக்கின்றனர்.

அரசு வழங்கும் இந்த HDBகளை ஒரு காலகட்டத்திற்கு பிறகு மக்கள் சொந்த வீடுகளாக மாற்றிக்கொள்ள சிங்கப்பூர் அரசு மானியமும் தருகின்றது. 1965ம் ஆண்டு தனிநாடாக பிரிந்ததிலிருந்து சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட HDBகளை சிங்கப்பூர் கட்டிமுடித்துள்ளது. மேலும் இயற்கையாகவே சிங்கப்பூருக்கு அமைந்த ஒரு சிறப்பு தான் நமது Harbor. உலக அளவில் கடல் வழி போக்குவரத்துக்கு சிங்கப்பூர் மத்திய பகுதியாக திகழ்வதால் இந்த Harbor மூலம் நல்ல வருவாய் கிடைத்து வருகின்றது. மேலும் வேலையில்லா திண்டாட்டமும் சிங்கப்பூரில் குறைய துவங்கியது.

சிங்கப்பூர் என்ற பெயர் இருந்தாலும் சிங்கப்பூரில் ஒரு சிங்கம் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 11வது நூற்றாண்டில் சுமித்ரா இளவரசர் ஒருவர் கடல் வழியே இங்கு வந்தபோது கரையில் தொலைவில் ஒரு மிருகத்தை பார்க்க சிங்கப்பூரா.. சிங்கப்பூரா என்று மலாய் மொழியில் கத்திகொண்டே அதை துரத்தி சென்றதாகவும், ஆனால் அருகில் வந்தபிறகு அது சிங்கம் அல்ல என்பதை உணர்ந்ததாகவும் ஒரு வரலாறு உண்டு. இதன் பிறகு தான் சிங்கப்பூர் என்ற பெயரை நமது நாடு பெற்றதாக கூறுகிறார்கள், மலாய் மொழி தான் இங்கு பூர்விகம் என்றாலும் தமிழ், மலாய், மாண்டரின் மற்றும் சீனம் என்று 4 ஆட்சி மொழிகள் நமது சிங்கப்பூரில் பேசப்படுகிறது, அதே நேரத்தில் கார்பொரேட் ஆதிக்கம் அதிகம் உள்ளதால் ஆங்கிலமும் தற்போது தலைதூக்கி நிற்கிறது.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் மூதாட்டியை 26 முறை கத்தியால் குத்திய பணிப்பெண்” – குற்றம் நிரூபணமானால் மரண தண்டனைக்கு வாய்ப்பு

நமது சிங்கப்பூருக்கு Fine நகரம் என்ற பெயரும் உள்ளதை நாம் அறிவோம், சின்ன சின்ன விதி மீறல்களுக்கு கூட நமது சிங்கப்பூர் அரசு கடுமையான அபராதங்களை விதித்து வருகின்றது. சுமார் 63 தீவுகளை உள்ளடக்கியது தான் நமது சிங்கப்பூர் தீவு. இத்தனை தீவுகள் இருந்தாலும் 250மீட்டருக்கு மேல் கட்டிடம் கட்டப்பட்டால் அதற்கும் அபராதம் நிச்சயம் விதிக்கப்படும். ஒழுங்குமுறை, நேர்த்தியை சட்டங்கள், என்று தனக்கென்ற தனி கெத்துடன் தலைநிமிர்ந்து நிற்கிறது நம்ம சிங்கப்பூர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts