சிங்கப்பூர், இங்கு பல நாடுகளை சேர்ந்த பல லட்சம்மக்கள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர் என்பது நாம் அறிந்ததே. பல கலாச்சாரங்கள் ஒன்றிணைந்து வாழும் இந்த சிங்கப்பூரில் வேலைக்காக பல்லாயிரம் மக்கள் பல நாடுகளில் இருந்து வருகின்றனர். குறிப்பாக சிங்கப்பூரின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு என்பது மிகவும் அதிகம். அதிலும் குறிப்பாக ஆரம்பகாலம் முதலே சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களுக்கும் அதிக பங்கு உண்டு என்றால் அது சற்றும் மிகையல்ல.
இங்கு வந்து பணிபுரியும் தொழிலாளர்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப Driving License எடுப்பவர்களுக்கும் உண்டு. சொந்த நாட்டில் நாம் ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தாலும் வெளிநாடுகளுக்கு செல்லும்போது நாம் நிச்சயம் அங்குள்ள சட்டதிட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அறிந்தும் கற்றும் ஓட்டுநர் உரிமம் பெறவேண்டும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீங்கள் சிங்கப்பூரில் ஓட்டுநர் உரிமம் பெற்று மீண்டும் தாயகம் திரும்பும்போது அங்கிருந்துகொண்டே அவர்களால் தங்கள் ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைன் மூலம் புதுப்பிக்க முடியுமா என்ற சந்தேகம் பலரிடம் உள்ளது.
இதற்கான விடை “இல்லை” என்பதே ஆகும், சிங்கப்பூரை பொறுத்தவரை சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமம் என்பது வெளிநாடுகளில் இருந்து இங்கு வருபவர்களுடைய விசாவை பொறுத்தே வழங்கப்படுகிறது. ஆகையால் அந்த விசா உள்ள காலத்தில் மட்டுமே அவர் சிங்கப்பூர் வந்து தேவையான ஆவணங்களை வழங்கி ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க முடியுமே தவிர இந்தியாவில் இருந்துகொண்டே அவர்களால் அந்த புதுப்பிப்பை செய்யமுடியாது .
சிங்கப்பூர் சட்டதிட்டங்களை பொறுத்தவரை செல்லுபடியாகும் விசா உள்ளவர்கள் மட்டுமே இங்கு வந்து புதுப்பிக்க முடியும். மேலும் இந்த புதுப்பித்தலும் சில வருடங்களுக்கு மட்டுமே சாத்தியம். அந்த கால அளவை தாண்டும்போது அவர்கள் புதுப்பித்தலும் நிறுத்தப்படும். ஆகையால் அவர்கள் மீண்டும் முறையான விசாவுடன் வந்து மீண்டும் ஓட்டுநர் உரிமத்திற்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.