TamilSaaga

சிங்கப்பூர் Tampines Avenueவில் விபத்து.. குடிபோதை, அதிவேகத்தில் வந்த கார் : ஒருவர் மரணம் – பதைபதைக்க வைக்கும் Video

சிங்கப்பூரின் Tampines Avenue 1 மற்றும் Tampines Avenue 10 சந்திப்பில் நேற்று வியாழன் (டிசம்பர் 23) இரவு நடந்த எதிர்பாராத விபத்தில் 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். தற்போது இந்த விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத. இந்த விபத்தில் நான்கு கார்கள், ஒரு டாக்சி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை சம்பந்தப்பட்டிருப்பதாகவும், சிவப்பு நிற மெர்சிடிஸ் கார் ஒன்று போக்குவரத்து கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது என்றும் ஆன்லைனில் பரவும் காட்சிகள் காட்டுகின்றன.

இதையும் படியுங்கள் : தவறான பாதையில் சென்ற “இந்திய மாணவர்”

இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு இரவு 11.10 மணியளவில் தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். 59 வயதான ஆண் ஓட்டுநர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்றும் அறிவிக்கப்பட்டது. சாங்கி பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோது 22 மற்றும் 38 வயதுடைய விபத்தில் சிக்கிய மற்ற நான்கு ஆண்கள் சுயநினைவுடன் இருந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கார் விபத்து காணொளி – Curtsey SG Road Vigilante Facebook Page

இச்சம்பவம் குறித்து இரவு 11.10 மணியளவில் எச்சரிக்கப்பட்ட சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, காரின் ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, ஹைட்ராலிக் மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி மீட்கப்பட்டதாகத் தெரிவித்தனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் 33 வயதுடைய ஆண் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts