TamilSaaga

“உட்லண்ட்ஸ் Super Fast ரயில் நிலையம்” : பொதுஇடத்தில் ஓய்வெடுத்த வெளிநாட்டு தொழிலாளர்கள் – என்ன காரணம்?

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் “Super Fast” ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் மட்டும் புத்தாண்டு தினங்களின்போது அங்கிருந்த பொது இடங்கள் மற்றும் நடைபாதையில் 15க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியிருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த தகவல் சில சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது. இது குறித்து பிரபல செய்தி நிறுவனமான ST தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : முதியவரிடம் 35,350 வெள்ளி அபேஸ் செய்த “ரவிவர்தன்” : சிங்கப்பூர் போலீசில் சிக்கியது எப்படி?

அந்த பகுதியில் (உட்லண்ஸ்) பணி செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கு மற்றும் ஓய்வு எடுப்பதற்கு என்று உட்லண்ட்ஸ் சூப்பர் பாஸ்ட் ரயில் நிலையத்திற்கு பின்புறமாக கூடாரங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது. இந்த மாதத்தின் துவக்கத்தில் அதாவது 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்தில் ST நிறுவனம் இந்த பகுதியை பார்வையிட்டபொழுது பல ஊழியர்கள் கூடாரங்களில் ஓய்வெடுப்பதை கண்டுள்ளார்.

ஆனால் சென்ற மாதம் அதாவது கடந்த ஆண்டு இறுதியில், பல நேரங்களில் இரவு 10 மணிக்கு மேல் வெகுசில ஊழியர்கள் வெவ்வேறு இடங்களில் ஓய்வு எடுப்பதை அவர்களால் காண முடிந்தது. பிளாஸ்டிக் பைகள், அட்டைகள் போன்றவற்றை கீழே விரித்து, அதன் மேல் அவர்கள் ஓய்வு எடுத்து வருகின்றனர். அந்த பகுதி நிர்வாகிகள் வேலைக்கு வருமாறு முன்னதாகவே வரச் சொன்னதால் அவர்கள் வேறு வழியின்றி இவ்வாறு செய்ததாகவும் சில ஊழியர்கள் தகவல்களை அளித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : “வெளிநாட்டு தொழிலாளர்களின் FIN-ஐ பயன்படுத்தி திருட்டு” : சிங்கப்பூர் பெண்ணுக்கு 7 மாத சிறை – தொழிலாளர்களே உஷார்

சிங்கப்பூர் அரசை பொறுத்தவரை வெளிநாட்டு ஊழியர்கள் ஓய்வு எடுக்க கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ள பொது இடங்களில் உறங்குவது தெரியவந்தால் இது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது மனிதவள அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டுக்கும் 2021 ஆம் ஆண்டுக்கும் இடையில் 20க்கும் அதிகமான நிறுவனங்கள் மீது மனிதவள அமைச்சகம் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு அபராதமும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல ரயில் நிலையத்தின் வாசலில் சில பொதுமக்களும் உறங்குவது தற்போது தெரியவந்துள்ளது. தொற்று பரவல் காலத்திற்கு முன்பு இருந்த நிலையைக் காட்டிலும் அரசாங்கம் சார்பற்ற அமைப்புகளிடம் ஆதரவு பெரும் இத்தகைய பொதுமக்களின் எண்ணிக்கை தற்பொழுது ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது என்று சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts