TamilSaaga

“இன்று உலக புலம்பெயர்ந்த பறவைகள் தினம்” : பன்னாட்டு பறவைகளை வரவேற்கும் சிங்கப்பூர்

இன்று உலக புலம்பெயர்ந்த பறவைகள் தினம்.!, சிங்கப்பூரிலும் இந்த தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பல பறவைகள், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான குளிர் காலங்களில் இருந்து தப்பிக்க சிங்கப்பூருக்கு வெகுதூரம் பயணம் செய்து வருகின்றன என்று அமைச்சர் டெஸ்மாண்ட் லீ இன்று வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். பல மையில் கடந்து இந்த பறவைகள் தங்களுக்கு என்று சொந்த “வேகமான பாதை” ஒன்றை வைத்திருக்கிறார்கள் என்றார் அவர்.

இந்த புகைப்படங்கள் பொதுவான ரெட்ஷாங்க் மற்றும் விம்ப்ரெல் ஆகியவற்றைக் காட்டுகிறது. புலம்பெயர்ந்த பறவைகளை சுங்கேய் புலோ ஈர நிலப்பரப்பில் நாம் காணலாம். காமன் ரெட் ஷாங்க் அதன் நீண்ட பிரகாசமான ஆரஞ்சு-சிவப்பு கால்களால் அடையாளம் காணப்படலாம். இன்று NParks-ன் வாடர் வாட்ச் பட்டறையில் இந்த பறவைகள் மற்றும் சின்ன சிறகு கொண்ட பல பார்வைகளை (ரஷ்யா மற்றும் சீனாவைச் சேர்ந்த சில பறவைகள்) எப்படி அடையாளம் காண்பது என்பது பற்றி மேலும் இந்த காணொளியில் அறியலாம்.

உலக புலம்பெயர்ந்த பறவைகள் தினம் (WMBD) என்பது புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களின் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டும் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமாகும். இது உலகளாவிய பரவலைக் கொண்டுள்ளது மற்றும் புலம்பெயர்ந்த பறவைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், அவற்றின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் அவற்றைப் பாதுகாக்க சர்வதேச ஒத்துழைப்பின் தேவை பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை அதிகரிக்க உதவும் ஒரு சிறந்த கருவியாகும்.

Related posts