TamilSaaga

சிங்கப்பூரில் வேலை கிடைக்க உங்களுக்கான வாசலை திறந்துவிடும் “Glassdoor”.. படிக்காதவர்களுக்கும் இங்கு வேலை ரெடி! நேரடி Interview.. முழு சம்பளம் உங்கள் கையில்

சிங்கப்பூரில் வேலை தேட இதைவிட ஒரு சிறந்த வழி உங்களுக்கு இருக்க முடியாது. படித்தவர்களும் சரி.. படிக்காதவர்களுக்கும் சரி.. அனைவருக்கும் அவரவர்களின் படிப்பு, திறமைக்கேற்ற வேலையை அடையாளம் காட்டுகிறது இந்த “Glassdoor” வெப்சைட்.

இதில் சிங்கப்பூரில் வேலை பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

1, முதலில் உங்கள் மொபைலிலோ அல்லது லேப்டாப்பிலோ https://www.glassdoor.co.in/member/home/index.htm என்ற இந்த லிங்கை க்ளிக் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள்.

2, பிறகு, உங்கள் கூகுள் அக்கவுண்ட் மூலமாகவோ அல்லது உங்களது முகநூல் அக்கவுண்ட் மூலமாகவோ இந்த Glassdoor வெப்சைட்டில் Log-In செய்யுங்கள்.

3, அதன் பிறகு, ‘Location’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில், ‘Singapore’ என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

4, பிறகு, Job Title, Keywords or Company என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில், நீங்கள் என்ன வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அல்லது சிங்கப்பூரில் எந்த கம்பெனிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதனை இங்கே டைப் செய்து தேடலாம்.

5, உதாரணமாக, சிங்கப்பூரில் டிரைவர் வேலை தேடுகிறீர்கள் என்றால், Job Title, Keywords or Company என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில், “Driver” என்று டைப் செய்து Search பட்டனை க்ளிக் செய்தால், சிங்கப்பூரில் மிக சமீபத்தில் எந்தெந்த கம்பெனியில் டிரைவர் வேலைக்கு அழைப்பு கொடுத்துள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

6, கடந்த 24 மணி நேரத்தில் இருந்து பல நாட்களுக்கு முன்பு, கம்பெனிகள் கொடுத்திருந்த வேலை வாய்ப்பு அறிவிப்புகள் என அனைத்தையும் இங்கு நீங்கள் காணலாம்.

7, பிறகு நீங்கள் எந்த கம்பெனியை தேர்வு செய்கிறீர்களோ, அதனை க்ளிக் செய்து Apply Now என்ற ஆப்ஷன் மூலம், உங்கள் Resume-ஐ அப்லோட் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

8, வேலைக்கு விண்ணப்பித்த பிறகு 2 – 3 வார காலத்திற்குள், உங்களது Resume சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் HR அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு, தகுதி இருப்பின் உங்களை தொடர்பு கொள்வார்கள்.

9, அதன் பிறகு, அடுத்தடுத்த சுற்றுகளுக்கான Interview முடிந்த பிறகு, நீங்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படும் பட்சத்தில், உங்களுக்கான வேலைக்கான ஆர்டர் மற்றும் விசா உள்ளிட்ட விவரங்களை அவர்களே வழங்குவார்கள்.

10, இந்த ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கும் இடையில், எந்த ஏஜெண்டுக்கும், ஏஜென்சிக்கும் இடமிருக்காது. நேரடியாக நீங்கள் கம்பெனியின் HR-யிடம் பேசுவீர்கள். அவர்கள் உங்களுக்கு தகுதி இருப்பதாக நினைத்தால், விசா, சம்பளம் என்று அனைத்து விவரங்களையும் உங்களுடனேயே பகிர்ந்து கொள்வார்கள். ஸோ, குறிப்பிட்ட சில தொகை தான் செலவு செய்ய வேண்டியிருக்குமே தவிர, 2 லட்சம், 3 லட்சம் என்று அதிகளவில் ஏஜெண்ட்டுகளுக்கு நீங்கள் கொடுக்கும் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts