TamilSaaga

சிங்கப்பூரில் 10 பேருக்கு தூக்கு தண்டனை தயார்… எந்த நாடு அழுத்தம் கொடுத்தாலும் அடிபணிய மாட்டோம் – அமைச்சர் சண்முகம் “பொளேர்”

போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 10 மலேசியர்கள் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி தயாராக உள்ளதாக சிங்கை அமைச்சர் சண்முகம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தி ஸ்டாருக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், “இந்த வருடத்தின் தொடக்கத்தில் போதை பொருள் கடத்தல் தொடர்பாக மலேசியாவைச் சேர்ந்த இருவர் தூக்கிலிடப்பட்டனர். அவர்களை தவிர்த்து, இன்னும் 10 மலேசியர்கள் தங்கள் தூக்கு தண்டனையை எதிர் நோக்கியுள்ளனர். அதேசமயம், தங்களுக்கு கருணை கிடைத்துவிடாதா என்றும் ஏக்கத்தில் உள்ளனர். இவர்களும் போதை பொருள் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான்” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் சண்முகம், “போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக சிங்கப்பூர் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. மரண தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி உள்நாட்டிலோ, அல்லது சர்வதேச அளவிலோ அழுத்தம் வந்தாலும் கூட, எதற்கும் சிங்கை அரசு அடி பணியாது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் குடித்துவிட்டு லாரியை ஓட்டிய டிரைவர்… விபத்தில் சிக்கி உணவு Food Delivery ஊழியர் பலி – உயிரை காவு வாங்கிய போதை!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள், மலேசியாவிலிருந்து வந்தாலும் சரி, வேறு எங்கிருந்தாலும் சரி, சிங்கப்பூரின் கடுமையான போதைப்பொருள் சட்டங்கள் மூலம் பிடிபட்டு தண்டனை பெற்றால், அதனால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 27 அன்று, உள்ளூர் மற்றும் சர்வதேச வேண்டுகோளை மீறி போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியாவைச் சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார். தூக்கிலிட்டது.

சிங்கப்பூருக்கு 42.72 கிராம் ஹெராயின் கடத்தியதற்காக 2010 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 34 வயதான நாகேந்திரன், எவ்வளவோ போராடிப் பார்த்தும் அசராத சிங்கப்பூர் அரசு அவரை தூக்கிலிட்டது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து ஜூலை 7ஆம் தேதி 32 வயதான கல்வந்த் சிங் போதைப்பொருள் கடத்தியதற்காக சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts