TamilSaaga

“சிங்கப்பூரின் பாரம்பரியமிக்க 73 நினைவு சின்னங்கள்” – இன்று முதல் ஒரே இடத்தில் கண்டு பிரம்மிக்கலாம்

சிங்கப்பூரில் 73 நினைவுச்சின்னங்கள் நமது தீவு முழுவதும் அமைந்துள்ளன, ஆனால் இன்று சனிக்கிழமை நவம்பர் 13 முதல் ஜனவரி 2 வரை, அவை அனைத்தும் “ஒரே கூரையின் கீழ்” இருக்கும் என்று ஒரு சிறப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. காகிதத் துண்டுகள் முதல் 3D தொழில்நுட்பத்தில் அச்சிடப்பட்டவை வரை பல்வேறு வடிவங்களில் அந்த நினைவு சின்னங்களின் காட்சிகளைக் கொண்ட கண்காட்சியில் மெய்நிகர் தொழில்நுட்பமும் இடம்பெறவுள்ளது.

நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் 1971ல் நடைமுறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகத்தில், நினைவுச்சின்னங்கள் பாதுகாப்பு வாரியத்தை உருவாக்குவதன் மூலம் நமது குடியரசின் பாரம்பரிய பாதுகாக்கப்படும் என்பது நாம் நினைவுகூரத்தக்கது. தற்போது இந்த வாரியம் தேசிய பாரம்பரிய வாரியத்தின் (NHB) கீழ் உள்ள தளங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பு பிரிவு என்று அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகத்தில் (SUTD) பட்டதாரியான 29 வயதான திரு. மாட் சியு என்பவரால் 3D-அச்சிடப்பட்ட மாதிரிகளைப் பயன்படுத்தி, கண்காட்சியில் உள்ள 11 நினைவுச்சின்னங்கள் சிரமமின்றி மீண்டும் உருவாக்கப்பட்டன. இதுகுறித்து அவர் கூறியபோது துல்லியமான அளவீடுகளுடன் கூடிய தெளிவான கட்டிடத் திட்டங்கள் தன்னிடம் இல்லாததால், பழைய கட்டிடங்களை 3டி வடிவில் உருவாக்குவது சவாலாக உள்ளது என்றார்.

இந்த சிக்கலை சரிசெய்ய, ஒவ்வொரு நினைவுச்சின்னத்தின் அம்சங்களையும் தெளிவாகப் புரிந்துகொள்ள, கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் எர்த் ஆகியவற்றின் சாலைக் காட்சி செயல்பாட்டை அவர் பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார். இந்த மாதிரிகள் பார்வையாளர்களுக்கு வெவ்வேறு கண்ணோட்டத்தில் நினைவுச்சின்னங்களைப் பற்றி அறிய உதவும். ஏனெனில் அவை கட்டிடங்களை கழுகு பார்வையில் காண்பிக்கின்றன. இது பொதுவாக மனிதர்களுக்கு கிடைக்காத ஒரு பார்வை என்றும் திரு சியு கூறினார்.

Related posts