TamilSaaga

“Gift கடை” திறந்து வைக்கச் சென்ற சித்ராவுக்கு “டார்ச்சர்”?.. ஆட்சி மாறியதால் மாறும் காட்சி.. சிக்கும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ? – யார் அந்த “முக்கிய” புள்ளி?

சின்னத்திரையில் பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்தவர் விஜே சித்ரா. தமிழ்நாட்டில் பாதி குடும்பங்களுக்கு “முல்லை” என்று சொன்னால் தான் இவரைத் தெரியும். அந்தளவுக்கு “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மூலம் மக்கள் மனங்களில் இடம் பிடித்திருந்தார்.

இந்நிலையில், சித்ரா தற்கொலை செய்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் இதற்கு ஒரு முடிவு எட்டப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் பல விஷயங்கள் இதில் மூடி மறைக்கப்பட்டுள்ளன என்று முணுமுணுக்கப்படுகிறாது.

ஒரு நிகழ்ச்சிக்கு 25 ஆயிரம் ரூபாய் என்று சம்பாதித்து வந்தவர் சித்ரா. அதுமட்டுமல்ல, தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு பொருளை மார்க்கெட்டிங் செய்ய அவர் வாங்கிய தொகை, சின்னத்திரையில் வேறு எவரும் வாங்கிறாத தொகை என்கின்றனர்.

இருப்பின்னும், போதை, குடிப்பழக்கம் என்று சில வஸ்துக்களையும் சித்ரா தினம் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. எனினும், தொழில் என்று வந்துவிட்டால் எந்தவித சிக்கலும் இன்றி, ஒரு குழந்தையைப் போல துள்ளிக் குதித்து இறங்கிவிடுவார். அவர் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும்.

மேலும், சித்ராவின் கணவர் ஹேமந்த் எந்த வேலைக்கும் செல்லாமல் சித்ராவின் நிழலில் இருந்து வந்ததாகவும் கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக சித்ரா தற்கொலை செய்துகொண்ட பிறகு பல அரசியல் புள்ளிகள், ஆட்சியின் அதிகாரத்தை வைத்து தப்பித்துக்கொண்டதாகவும், பின்புலம் இல்லாத ஹேம்நாத் சிக்கிக் கொண்டதாகவும் கூறுகின்றனர்.

மேலும் படிக்க – ஏர்போர்ட்டின் உள்ளே சினிமா தியேட்டர், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஹோட்டல்ஸ் – “பிரம்மாண்ட பாகுபலி”யாக உருமாறி வரும் சென்னை விமான நிலையம்

இந்த சூழலில், ஆட்சி மாற, காட்சிகள் மாற இப்போது மீண்டும் சித்ராவின் வழக்கு தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கணவர் ஹேமந்த் பல முக்கிய யூடியூப் சேனல்களை தனது வக்கீலுடன் அணுகி பேட்டி அளித்து வருகிறார்.

அதில், சித்ராவின் மரணத்துக்கு அதிமுகவைச் சேர்ந்த ஒரு முக்கியஸ்தரும் காரணம் என்று வெளிப்படையாக அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மறு விசாரணை நடத்தினால் நானும் தகுந்த ஆதாரத்தை தருவேன் என்று சித்ராவின் தந்தை காமராஜூம் பேட்டி அளித்துள்ளது விசாரணையை சூடு பிடிக்க வைத்துள்ளது.

2020ல் நடந்தது என்ன?

சென்னையைச் சேர்ந்த சித்ரா, கடந்த 2020 டிசம்பர் மாதம் செம்பரம்பாக்கத்தில் உள்ள ஒரு பெரும் நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு காதல் கணவர் ஹேமந்த் தான் காரணம் என்று சொல்லி அவரது தந்தை காமராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் ஹேமந்தை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கணவர் ஹேமந்த், அவரின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தினேஷ், தந்தை காமராஜ், தாய் விஜயா, சகோதரி சரஸ்வதி உள்ளிட்ட பலரிடம் நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்

மேலும் சென்னை பெரம்பலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அரசியல் பிரமுகர்கள் பலரும் சித்ராவின் நட்பு வட்டத்தில் இருந்தது தெரிவந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்த சித்ராவின் காதல் கணவர் ஹேமந்த் தனது மனைவியின் தற்கொலைக்கு பின்னால் பணம் மற்றும் அதிகார பலம் படைத்த அரசியல் மாஃபியா கும்பல் உள்ளது. சென்னையை சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள் சிலரிடம் பெரிய அளவில் பணம் வாங்க முயற்சி செய்கினறனர். அதற்கு என்னையும் உடந்தையாக்க பார்க்கிறார்கள்.

மேலும் படிக்க – Exclusive : சொந்த ஊரில் தற்கொலை செய்து கொண்ட உடன்பிறந்த சகோதரன்.. இறுதிச்சடங்கிற்கு கூட போக முடியாமல் சிங்கப்பூரில் தவிக்கும் அண்ணன் – இவ்வளவு தானா இந்த வெளிநாட்டு வாழ்க்கை!

இந்த முயற்சிக்கு நாள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், கொன்றுவிடுவோம் என்று மிரட்டுவதாக கூறியுள்ளார். இந்த புகாரை தொடர்ந்து மீண்டும் சித்ராவின் தற்கொலை வழக்கை தூசி தட்டிய காவல்துறையினர், சித்ரா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அவரிடம தொடர்பில் இருந்து சினிமா, அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் யார் என்ற பட்டியலை தயார் செய்துள்ளனர்.

அதன்படி சித்ரா தற்கொலைக்கு முன்பு பெரம்பலூரில் ஒரு கிஃப்ட் சென்டர் ஒன்றை திறந்து வைக்க சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு பின் சித்ராவுக்கு அதிமுக எம்எல்ஏ ஒருவர் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள அரசு அனுமதி எதிர்நோக்கி காவல்துறையினர் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts