TamilSaaga

“என்னை அடக்கம் செய்யும் முன்பு அந்த தமிழ் பாடலை போடுங்க…” சிங்கை அதிபர் எஸ்.ஆர்.நாதன் – அந்த தமிழனை கொண்டாட மறந்த தமிழ் மீடியாக்கள் – Live நிகழ்ச்சியில் சாடிய ரஜினிகாந்த்

தேவா தனது 72வது பிறந்தநாளை நேற்று(நவ.20) கொண்டாடினார். அதற்கு சிறப்பு செய்யும் வகையில் யூ ட்யூப் சேனல் ஒன்று தேவா தி தேவா என்ற இசை நிகழ்ச்சியை தமிழ்நாட்டின் சென்னையில் நடத்தியது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பேசியது பலருக்கும் ஆச்சரியத்தை தரும் வகையில் அமைந்திருந்தது. அங்கு எடுக்கப்பட்ட வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ரஜினிகாந்த் பேசியதாவது, சிங்கப்பூர் அதிபராக இருந்தவர், நாதன். தமிழரான அவர் மலேசியாவில் வாழ்ந்தவர். அவருடயை தனது உயிலில் கடைசி ஆசையாக, சேரன் இயக்கத்தில் வெளியான படம் பொற்காலம். அப்படத்தில் இடம்பெற்ற, தேவா இசையமைத்த, ‘தஞ்சாவூரு மண்ணு’ பாடல் தனக்கு மிகவும் பிடிக்கும். அதை எனது இறுதி ஊர்வலத்தில் ஒலிக்கவிட்டு, அதன்பின் தனது உடலை எடுத்துச்செல்ல வேண்டும் என கூறியிருந்தார்.

இதையடுத்து, சிங்கப்பூர் அதிபர் நாதன் உயிரிழந்தபின் அவரது உடலை கொண்டுசென்றபோது, பலநாட்டின் தலைவர்கள் முன்னிலையில் அந்த பாடல் ஒலிப்பரப்பப்பட்டது. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாய்ந்து, ஹாங்காங் என பல நாடுகளில் அந்த பாடலின் அர்த்தத்தை மொழிபெயர்த்து அதன் பத்திரிக்கையில் விளக்கியிருந்தனர். ஆனால், எந்த தமிழ் ஊடகமும் அதுகுறித்து எழுதவில்லை. இது தேவாவிற்கு எத்தனை வலி கொடுத்திருக்கும். இதுப்போன்ற செய்திகளை தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் முக்கியத்துவம் கொடுத்து எழுதுங்கள் என வேண்டுக்கோள் விடுத்திருந்தார்.

ரஜினிகாந்தின் ஹிட் படங்களான அண்ணாமலை, பாட்சா, அருணாச்சலம் உள்ளிட்ட படங்களுக்கு தேவா தான் இசையமைத்து இருந்தார். அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்தின் டைட்டில் கார்ட்டில் பெயருக்கு வரும் அந்த பிஜிஎம்மை போட்டதும் தேவா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் வரலாற்றிலும் வளர்ச்சியிலும் நீங்காத இடம்பிடித்தவர் செல்லப்பன் ராமநாதன். மலேசியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சிங்கப்பூரின் தூதராகவும் பணிபுரிந்த நாதன் 1999ம் ஆண்டு முதல் முறையாக போட்டியின்றி சிங்கப்பூரின் அதிபராக பதவியேற்றார். அதன் பிறகு 2011ம் ஆண்டு வரை இருமுறை அவர் நமது சிங்கை மண்ணுக்கு அதிபராக இருந்தார். சிங்கப்பூர் வரலாற்றில் அதிக காலம் சுமார் 12 ஆண்டுகள் பதவியில் இருந்த பெருமைக்குரியவர்.

இவருக்கு “தஞ்சாவூரு மண்ணு எடுத்து” என்ற தமிழ் பாடல் மிகவும் விருப்பமான ஒன்றாம். இந்த பாடலை குறித்து பல முறை அவர் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் உரையாடியுள்ளார். தினமும் அந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என்னுடைய மூதாதையர்கள் எங்கு பிறந்திருப்பார்கள்? நான் தமிழ் நாட்டில் எந்த ஊரை சேர்ந்தவன் என்ற யோசனையில் தான் இருப்பாராம். நாதன் தஞ்சாவூரை சேர்ந்தவர் என்று கூறப்பட்டாலும் அதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts