TamilSaaga

“சிங்கப்பூர் வரும் இந்திய சுற்றுலா பயணிகள்” : வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த சிங்கப்பூர் – STB விளக்கம்

அண்டை நாடான இந்தியாவை பொறுத்தவரை அவர்களது சுற்றுலா துறையின் புள்ளிவிவரங்களின்படி, 2020ம் ஆண்டில் இந்தியப் பிரஜைகள் அதிகம் விரும்பும் வெளிநாட்டு பயணங்களில் நமது சிங்கப்பூர் முதல் 10இடங்களுக்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின் (STB) தரவுகள் சொல்வது என்னவென்றால், கடந்த 2019ம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வருகை தந்த 1.42 மில்லியன் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, சென்ற 2021ம் ஆண்டில் 54,000 என்ற அளவிற்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்பதே ஆகும்.

“சிங்கப்பூரில் 6,62,520 வெள்ளி வரி ஏய்ப்பு” : ஒரு பெண் உள்பட 7 பேர் கைது – Sketch போட்டு தூக்கிய சிங்கப்பூர் Customs

குறிப்பிடத்தக்க வகையில், சிங்கப்பூருக்கான டாப் மூன்று பார்வையாளர்களின் சந்தைகளில் இந்தியாவும் ஒன்றும். ஆனால் இந்த சூழலில் தான் கடந்த வாரம் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் மேற்குறிப்பிட்ட தரவுகளை வெளியிட்டது. இது நகர-மாநிலத்தில் சுற்றுலாத் துறையில் COVID-19 ஏற்படுத்திய வியத்தகு தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது என்று தான் கூறவேண்டும். இந்தியாவின் சுற்றுலா துறையின் புள்ளிவிவரங்களின்படி, 2020ம் ஆண்டில் இந்திய நாட்டினர் செல்ல விருப்பும் டாப் 10 நாடுகளில் சிங்கப்பூர் இருந்தது.

மேலும், 2020ம் ஆண்டில் மொத்தம் 2,89,287 இந்தியர்கள் சிங்கப்பூர் வந்துள்ளனர், இது அந்த ஆண்டில் பதிவான மொத்தப் புறப்பாடுகளில் 3.97 சதவீதம் ஆகும். சீனா, இந்தியா மற்றும் இந்தோனேஷியா ஆகியவை
சிங்கப்பூரின் கடந்த ஆண்டு டாப் 3 பார்வையாளர்களை மூல சந்தைகளாக இருந்த போதிலும், கோவிட்-க்கு முந்தைய ஆண்டை விட இந்த எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது என்று STB தெரிவித்துள்ளது.
2021ம் ஆண்டில், சிங்கப்பூர் சீனாவிலிருந்து 88,000 பயணிகளையும், இந்தியாவிலிருந்து 54,000 மற்றும் இந்தோனேசியாவிலிருந்து 33,000 பார்வையாளர்களைக் பெற்றுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு, அதாவது கோவிட் நோய்க்கு முந்தைய ஆண்டில், சிங்கப்பூர் வந்த பார்வையாளர்களின் டாப் 3 ஆதாரங்களும் இதே நாடுகள் தான். 2019ம் ஆண்டு சிங்கப்பூர் சீனாவிலிருந்து 3.64 மில்லியன் பார்வையாளர்களையும், இந்தோனேசியாவிலிருந்து 3.08 மில்லியன் பார்வையாளர்களையும் ஈர்த்தது, இந்தியா 1.42 மில்லியன் பார்வையாளர்களுடன் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது என்று சிங்கப்பூர் எழுத்தாளர் லீ காஹ் வை எழுதியுள்ளார்.

“மலேசியாவில் இறந்த சிங்கப்பூர் பெண்” : வழக்கு தொடர்ந்த கணவர், நீதிபதி கண்ணன் அதிரடி – எவ்வளவு இழப்பீடு தெரியுமா?

அதுமட்டுமல்லாமல், சிங்கப்பூர் 2019ல் இந்தியாவிற்காக 60278 இ-டூரிஸ்ட் விசாவைப் பெற்றுள்ளது என்று இந்தியாவின் சுற்றுலா புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இது மொத்த ஈ விசாக்களில் 2.1 சதவீதமாக இருந்தது என்பதும் நினைவுகூரத்தக்கது. சிங்கப்பூர் 2021ல் 3,30,000 சர்வதேச பார்வையாளர்களை மட்டுமே கொண்டிருந்தது, இது வரலாறு காணாத மிகக் குறைந்த பதிவாகும். 2019ல் சிங்கப்பூருக்கு வந்த 19.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகளில் இது இரண்டு சதவீதத்திற்கும் குறைவானதாகும். 2020 ஆம் ஆண்டு 2.7 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்ட ஒரு சிறந்த ஆண்டாக இருந்தது என்றும், ஆனால் பெரும்பாலானவர்கள் சிங்கப்பூர் பெருந்தொற்று காரணமாக அதன் எல்லைகளை மூடுவதற்கு முன் இருந்த முதல் இரண்டு மாதங்களில் வந்துள்ளனர் என்று லீ கா வை ஒரு கட்டுரையில் கூறியுள்ளார்.

ஆகவே சிங்கப்பூர் சுற்றுலாவில் அதிக பங்கு வகிக்கும் இந்தியர்களின் அளவு என்பது மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts