TamilSaaga

போதும்…போதும்..லெங்தா போது… ஒரு உணவு டெலிவரிக்காக சிங்கப்பூரில் இருந்து அண்டார்டிகா சென்ற தமிழக பெண்… வைரலாகும் வீடியோ

வெளி உணவகங்களுக்கு சென்று உணவருந்திய காலம் போய் தற்போது அனைவரும் மொபைலில் ஆர்டர் பண்ணி சாப்பிடுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். வீட்டின் சில கிலோமீட்டருக்குள் இருக்கும் ஹோட்டல்களில் பிடித்தமான உணவை ஆர்டர் போட்டு, அது வந்தது சாப்பிடுவதை தானே பார்த்திருக்கிறோம். ஆனால், சென்னை பெண் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து அண்டார்டிகா சென்று உணவை டெலிவரி செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நான்கு கண்டங்கள், 30,000 கிலோமீட்டர் தாண்டி உணவை டெலிவரி செய்வது பாஸ்ட் டெலிவரியாக கருதப்படும். ஆனால், உலகின் மிக நீளமாக டெலிவரியை செய்து இருக்கிறார் சிங்கப்பூரில் இருக்கும் சென்னையைச் சேர்ந்த மானசா கோபால்.

மானசா அண்டார்டிகாவில் ஒரு கஸ்டமருக்காக 4 கண்டங்களைத் தாண்டி வந்து உணவை டெலிவரி செய்திருக்கிறார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், `இன்று நான் மிகவும் ஸ்பெஷலான ஒரு உணவு டெலிவரியை செய்தேன். சிங்கப்பூரில் இருந்து அண்டார்டிகாவுக்கு 30,000+ கிமீ மற்றும் 4 கண்டங்களில் கடந்து இதை செய்தேன். இதை செய்த foodpanda singapore நிறுவனத்துடன் தானும் இருப்பதில் மகிழ்ச்சி’ எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்…

தன்னுடைய இன்னொரு பதிவில், இந்த பயணம் எப்படி சாத்தியமானது குறித்து விளக்கி இருக்கிறார். கடந்த ஆண்டு தான் அண்டார்டிகா செல்ல நிதி திரட்டி வந்தேன். அந்த பயணத்திற்கு ஸ்பான்சர் செய்யும் பிராண்டையும் தேடி வந்தார். 2021ல் தொடங்கிய இந்த பயணத்திற்கு கடந்த மாதம் தான் வழி பிறந்தது. புட் பாண்டா இதை செய்து தருவதாக கூறினர். அதன் மூலம் தான் இந்த ட்ரிப் சாத்தியமானதாக குறிப்பிட்டார். ஏப்ரலில், மானசா கோபால் சர்வதேச அண்டார்டிகா பயணம் 2022ல் இருந்தார். அதன் மூலமாக அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. தனது பயணத்தின் அடையாளமாக அவரின் கல்லூரி கொடியை அண்டார்டிகா மண்ணில் பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts