TamilSaaga

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களே.. நீங்கள் வேலைப்பார்க்கும் இடத்தில் இப்படியொரு பிரச்சனையை அனுபவித்து இருக்கீங்களா?

சிங்கப்பூரில் ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான Shopee மீது, சமூக ஊடகங்களில் பாகுபாடு மற்றும் மோசமான வேலை கலாச்சாரம் பற்றிய குற்றச்சாட்டுகளுக்காக கடுமையான புகார்கள் முன்வைக்கப்பட்டது. அந்த புகார்களில் ஒன்று, அந்நிறுவனத்தில் நடந்த மீட்டிங்கின் போது சீன மொழி பேசப்பட்டது என்றும் ஆவணங்களில் சீன மொழி பயன்படுத்தப்பட்டது என்றும் Glassdoor அறிக்கையின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

1966 ஆம் ஆண்டு முதல், சிங்கப்பூரின் இருமொழிக் கொள்கையானது (bilingual policy) தேசியப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களும் முதல் மொழியாக ஆங்கிலத்தைக் கற்க வேண்டும் என்றும் அதிகாரப்பூர்வ தாய்மொழியை இரண்டாம் மொழியாகக் கற்க வேண்டும்என்றும் கூறுகிறது.

இருமொழிக் கொள்கையானது சிங்கப்பூரை ஒரு பொருளாதார அதிகார மையமாக வெற்றிகரமாக மாற்றியுள்ளது, மேலும் ஒவ்வொருவரது வீட்டில் கூட மொழி எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அது வடிவமைத்தது. சிங்கப்பூர்வாசிகளில் கிட்டத்தட்ட பாதி பேர் வீட்டில் அதிகம் பேசும் மொழி “ஆங்கிலம்” என்று மக்கள்தொகை கணக்கெடுப்புத் தகவல் காட்டுகிறது.

இனம், மதம் மற்றும் மொழி பற்றிய கொள்கை ஆய்வுகள் நிறுவனம் (IPS) 2020 இல் வெளியிட்ட மற்றொரு ஆய்வில், 2018 இல் சிங்கப்பூரில் வாழும் பல்வேறு இனத்தவர்கள் பதிலளித்ததில், 71 சதவீதம் பேர் பொது இடத்தில் மற்றவர்களை தொடர்பு கொள்ள ஆங்கிலம் பயன்படுத்துவதாக கூறியது.

எனினும், பணியிடத்தில் ஆங்கிலம் விருப்பமான மொழியாக இருப்பது “மூளையற்றது” என்ற விமர்சனமும், புகார்களும் அவ்வப்போது எழுகின்றன.

மேலும் படிக்க – “காவல்துறை உங்கள் நண்பன்” : மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் நமது சிங்கப்பூர் காவல்துறை – “இவை” தான் காரணம்

அது எப்போது பிரச்சனையாகிறது?

சிங்கப்பூரில் வேலை செய்யும் இடத்தில் ஆங்கிலம் அல்லாத மொழியை பயன்படுத்துவது, எப்போது சிக்கலாக இருக்கும் என்பதை விளக்குவதற்கு, நாம் இரண்டு பொதுவான விஷயங்களை சொல்லலாம்.

முதலாவது விஷயம்: நான்கு பொறியாளர்கள்(Engineers) கொண்ட ஒரு குழு உள்ளது. அதில், மூன்று ஒரே நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் மூவரும் அலுவலகத்தில் தங்கள் சொந்த மொழியில் பேசுவார்கள், அல்லது அரட்டையடிப்பார்கள். தங்கள் அணியில் மீதமுள்ள அந்த சிங்கப்பூர்வாசியிடம் பேசும் போது மட்டும் அவர்கள் ஆங்கிலத்தை பயன்படுத்துகிறார்கள்.

இரண்டாவது விஷயம்: ஒரு அலுவலகத்தில், டீம் மீட்டிங் தொடங்க நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அப்போது ஒரு குழுவாக அமர்ந்துள்ள மேலாளர்கள் ஆங்கிலம் அல்லாத மொழியில் பேசுகின்றனர். ஏனெனில், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒரே மொழி பேசும் நபர்கள். சில சமயங்களில் அவர்கள் மீட்டிங்கின் போது, அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, தங்கள் மொழியில் ஒன்றிரண்டு வார்த்தைகளை அவ்வப்போது இடையிடையே சொருகுவது வழக்கம். ஆனால், அந்த இடைச்சொருகல் வார்த்தைகளுக்கு, உள்ளூர்க்காரர்களுக்கு அர்த்தம் தெரியாது.

டீம் மீட்டிங் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான மீட்டிங் என்று அனைத்திலும், இவ்விரு விஷயங்களும் அரங்கேறுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு சம்பவங்களையும் கேட்ட பிறகு, இதிலென்ன தீங்குள்ளது என்று தோன்றலாம். ஆனால், அந்த நேரத்தில், அவர்கள் பேசும் மொழி புரியாமல் மற்ற ஊழியர் அந்நியப்படுத்தப்படுவது தான் இங்கு பிரச்சனையாகிறது.

மொழி தெரியாதவர்களுக்கு என்ன சொல்லப்படுகிறது என்று புரியாதபோது, அவர்கள் அதை மிக மோசமானதாக கருதுகிறார்கள். ஒருவேளை அவை மீட்டிங் தொடர்பான விவாதப் பொருளாக கூட இருக்கலாம். ஆனால், ஆங்கிலம் அல்லாத மொழியில் பேசும் போது, உள்ளூர்க்காரர்கள் அங்கே அந்நியப்படுத்தப்படுகிறார்கள்.

இவை கேட்பதற்கு ‘இதெல்லாம் ஒரு விஷயமா பாஸ்?’ என்பது போல் தெரிந்தாலும், காலப்போக்கில் பெரிய மோதல்களை உருவாக்குகின்றன.

மக்கள்தொகையில் மாற்றம்

பல ஆண்டுகளாக, உலகம் முழுவதிலுமிருந்து திறமையான பணியாளர்களை ஈர்க்கும் உலகளாவிய நிறுவனங்களின் மையமாக சிங்கப்பூர் மாறியதால், தாய்மொழி அல்லாத ஆங்கிலம் பேசுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இதன் பொருள் என்பது, அலுவலகங்களில் இந்தியர்கள், சீனர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் பிற நாட்டவர்கள் நிரப்பப்பட்டுள்ளனர். அவர்கள் இங்கு வணிகங்களை நிறுவியவர்கவோ அல்லது வேலை அனுமதிச்சீட்டுகளைக் கொண்டவர்களாகவோ இருக்கின்றனர்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் இந்திய பெண்ணுடன் கல்யாணம்.. வீடு கேட்டதற்கு “Get Out” சொன்ன ஓனர்கள் – அடுத்த ஒரே வருடத்தில் நினைத்துக் கூட பார்க்காத வளர்ச்சி.. வீடு தராமல் விரட்டிய ஒவ்வொருவரையும் வியக்க வைத்த “இந்திய மாப்பிள்ளை”

வெளிநாட்டவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையிலான தொடர்புகளில் மொழி என்பது ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாகும். குறிப்பாக, ஒரே நாட்டைச் சேர்ந்த ஊழியர்கள், பணியிடங்களிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் தங்கள் ஆங்கிலம் அல்லாத தாய்மொழிகளில் பேசும் போதும், எப்போது நார்மலாக பேசுகிறார்கள், எப்போது மற்றவர்களை கேலி செய்கிறார்கள் என்று தெரியாமல் போகிறது.

சிங்கப்பூரில் பொதுவான அலுவல் மொழியாக ஆங்கிலத்தின் முக்கியத்துவம் OneWorkplace.sg Starter Kit இல் சிறப்பிக்கப்பட்டுள்ளது, இது பணியிடத்தில் வெவ்வேறு பின்னணியில் உள்ள ஊழியர்களை சிறப்பாக ஒருங்கிணைக்க நிறுவங்களுக்கு உதவும் ஒரு ஆதாரமாகும்.

பணியிடங்களுக்கான தேசிய ஒருங்கிணைப்பு பணிக்குழு (NIWG-W) பிப்ரவரி 2019 இல் உருவாக்கப்பட்டது, ஸ்டார்டர் கிட், குறைந்த திறமை உள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலமோ அல்லது அவர்களை இணைத்து பயிற்சி செய்வதன் மூலமோ பணியிடத்தில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்கான ஆதரவை வழங்குமாறு நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கிறது.

அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்ட துறைகளில் மட்டுமே, கட்டுமானம், கடல்சார் மற்றும் செயல்முறைத் துறைகளில் பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களுக்காக, ஆங்கிலம் அல்லாத மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன, இதனால் பணி ஆணைகள் எளிதாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன.

வேலை செய்யும் இடத்திலோ அல்லது வாட்ஸ்அப்பிலோ ஒரே தாய்மொழி உள்ளவர்கள் அவர்கள் பாஷையை பயன்படுத்துவது இயல்பானது. “ஆங்கிலத்தில் மட்டும்’ பேச வேண்டும் என்ற விதி, பணியிடத்தில் சாதாரண அரட்டைகளுக்கும், பணி தொடர்பான உரையாடல்களுக்கும் பொருந்துமா?

மனிதவளக் (HR) கண்ணோட்டத்தில், வேலைக்கும் சாதாரண விஷயத்திற்கும் இடையே மொழிப் பயன்பாட்டில் உள்ள இந்த வேறுபாடு மிதமிஞ்சியதாகவும், பிளவுபடும் காரணிகளாகவும் தோன்றும். பணி அமைப்புகளில் சில சமூகக் கூறுகள் உள்ளன. அதாவது ஜாலி அரட்டைகள், மதிய உணவின் போது ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்ட உணவருந்தும் குழுக்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் சக பணியாளர்கள் போன்றவை இந்த சமூகக் கூறுகளில் அடங்கும்.

இவை ஒட்டுமொத்தமாக பணி விதிமுறைகளை பாதிக்கிறது, நிறுவனத்தின் கலாச்சாரத்தை பாதிக்கிறது. குறிப்பாக சிங்கப்பூர் பல கலாச்சார அமைப்பை நிலைநிறுத்துகிறது.

மேலும் படிக்க – விடா முயற்சி.. சிங்கப்பூரில் ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமைத்தேடித் தந்த ஊழியர் – 2 வருடங்களாக குடும்பத்தையே பார்க்க முடியாமல் தவித்தவருக்கு கிடைத்த “பொக்கிஷம்”

நான் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் போன்ற உலகளாவிய நிறுவனங்களில் பணிபுரிந்தேன், அங்கு நிறுவனத்தின் தலைமையகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆங்கிலத்தின் பயன்பாடு தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டது.

இந்த இரண்டு நிறுவனங்களும் உலகளாவிய திறமைகளை ஈர்ப்பதற்கு, ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கின்றன.

வெளிநாட்டினர் மற்றும் உலகளாவிய பதவிகளில் உள்ள மேலாளர்கள் ஆங்கிலப் பயிற்சியைப் பெறுகிறார்கள். உள்ளூர் பணி விதிமுறைகளை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை பணியாளர்களுக்கு நினைவூட்டுகிறார்கள். மொழி அடிப்படையில் குழுக்களாக பிரிந்து செயல்படுவதை கடுமையாக எச்சரித்தனர்.

Institute of Policy Studies’ டாக்டர் மேத்யூ மேத்யூஸ், SMU’s யூஜின் டான் மற்றும் Roses of Peace நிறுவனர் மொஹமத் இர்ஷாத் ஆகியோர் இனம், சமூக ஊடகங்கள் மற்றும் முக்கியமான பகுதிகள் குறித்து பேசுகின்றனர்.

ஒருவரை தொடர்பு கொள்வது குறித்த தெளிவான விதிகளை அமைக்க பணியிடத்தில் முறையான மொழிக் கொள்கை அவசியம். இது அவர்களின் தினசரி தொடர்புகளில் நிர்வாகத்தால் வலுப்படுத்தப்பட வேண்டும். அனைத்து ஊழியர்களிடமும் பரவலாக தெரிவிக்கப்பட வேண்டும்.

இணக்கமான பணியிட சூழலை குறைக்கும் மொழியின் பயன்பாடு குறித்த உணர்திறன்களை அறிந்து கொண்டு, HR விடாமுயற்சியுடன் புகார்களைத் தீர்க்க வேண்டும். இது போன்ற பிரச்சனைகளை HR-கள் சாதாரணமாக கடந்து செல்லாமல், அவற்றை தொடக்கத்திலேயே கிள்ளி ஏறிய முக்கிய நடைமுறைகளைச் செயல்படுத்த வேண்டும்.

இறுதியாக, பணியாளர்களுக்கு (மேலாளர்கள் உட்பட) ஆங்கிலத்தின் பயன்பாட்டை நிலைநிறுத்துவதற்கு பயிற்சி அளிக்கவும் மற்றும் பணி அமைப்புகளில் வெளிநாட்டு மொழிகளின் பரவலான பயன்பாடு எவ்வாறு அவநம்பிக்கையை வளர்க்கிறது என்றும் அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் எடுத்துக் கூற வேண்டும்.

பேசுவதன் முக்கியத்துவம்

நிறுவனங்களில் ஊழியர்கள் ஏதாவது சரியாக இல்லை என்று உணர்ந்தால், புகார் செய்ய அல்லது அதை சீர்குலைக்க விடாமல் பேசுவதற்கு முன்முயற்சி எடுக்க வேண்டும்.

சக ஊழியர்கள் தங்கள் ஆங்கிலம் அல்லாத மற்ற மொழியை பேசும் போது, அது மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் விளைவை உணர வேண்டும்.

இதேபோல் பாதிக்கப்பட்ட மற்ற ஊழியர்களும் அப்படி உணர்ந்தால், சம்பந்தப்பட்டவர்களை ‘அவர் இந்த மொழி பேசுறார்; அந்த மொழி பேசுறார்’ என்று குறை சொல்லாமல், தொழில்முறையில் நிலைமையை கையாள வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் போது, “நீங்கள் சொன்னது/செய்தது எனக்கு சங்கடமானதாக/ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பதைக் கண்டேன், மேலும் ஒரு நண்பர்/சக பணியாளராக மீண்டும் இது நடக்காமல் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கனிவுடன் தெரிவிக்கலாம்.

நடுநிலையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் மூலம், சந்தேகத்தின் பலனைக் கொடுப்பதற்கும் எதிர்கால தவறான புரிதல்களைத் தவிர்ப்பதற்கும் நீங்கள் உறவை மதிக்கிறீர்கள் என்பதையும் காட்டுகிறீர்கள்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் வாரத்தில் 4 நாட்களே வேலை.. 10% ஊதிய உயர்வு – ஊழியர்களின் தலையில் ஐஸ் பாறையை தூக்கி வைத்த நிறுவனம்! அள்ளிக் குவிந்த விண்ணப்பங்கள்!

ஆசிய கலாச்சாரங்களில் வேரூன்றிய மற்றும் உலகளாவிய வர்த்தகத்தின் குறுக்கு வழியில் அமைந்துள்ள ஒரு திறந்த பொருளாதாரமாக, பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட சிங்கப்பூர் ஆங்கிலத்தை வேலை மொழியாக மேம்படுத்துவதன் மூலம் முன்னேறியுள்ளது.

அதேபோல், வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் ஊழியர்கள் பணிபுரியும் மற்றும் பணியிடத்தில் நன்றாகப் பழகும் போது வணிகங்கள் ஆதாயமடைகின்றன. எனவே, ஆங்கிலம் அல்லாத மொழி பேசுபவர்கள் இல்லாமல், சிங்கப்பூரின் வளர்ச்சி முழுமையாக இருக்காது. அதே சமயம், ஒரு குழுவாக இருக்கும் போது, அந்த குழுவின் பெரும்பான்மையானோர் தங்கள் மொழியில் பேசும் வழக்கத்தை கைவிட நாசூக்காக சொல்வதே சாலச் சிறந்தது. தமிழ் மொழி பேசுபவராக இருந்தாலும் சரி.. சீன மொழி பேசுபவராக இருந்தாலும் சரி… எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், அந்தந்த மொழி பேசுபவர்கள், சூழலை அறிந்து மற்றவர்களை சங்கடத்திற்கு ஆளாக்காமல் நடந்து கொள்ள வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts