TamilSaaga

அஞ்சா நெஞ்சம்.. குணத்தில் தங்கம்! – உலகுக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் சிங்கப்பூர் காவல்துறை – ராயல் சல்யூட்!

காவல்துறை உங்கள் நண்பன் என்றால் அதற்கு முழு தகுதியானவர்கள் சிங்கப்பூர் காவலர்கள்.

இவர்கள் சாமானிய மனிதர்களிடமும் அன்பாக பழகக் கூடியவர்கள்

யாரிடமும் ஆபாச கெட்ட வார்த்தை பேச மாட்டார்கள்

முக்கியமாக இவர்கள் யாரிடமும் லஞ்சம் வாங்க மாட்டார்கள்

கடையில் வாங்கும் பொருட்கள் மற்றும் சாப்பிடும் உணவுகளுக்கு கட்டாயம் பணம் கொடுத்துவிட்டுச் செல்வார்கள்.

யாரையும் உடனே கைநீட்டி அடித்துவிட மாட்டார்கள்.

ஒருவர் எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், சட்டத்தை தன் கையில் எடுக்க மாட்டார்கள்.

முறையாக நீதிமன்ற தீர்ப்பை மதிப்பவர்கள். குறிப்பாக இங்கு லாக்கப் மரணங்கள் நிகழ்வது இல்லை.

பசி என்று கேட்டால் உணவு வாங்கித் தருவார்கள்.

நாம் வீட்டிற்கு செல்வதற்கு பணம் இல்லையென்றாலும், பேருந்துகளில் செல்வதற்கு உதவி புரிவர்.

அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்து தருவர்.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக சுற்றிப்பார்க்க, இரவு பகல் பாராமல் பாதுகாப்பு வழங்குகின்றனர்.

சிங்கப்பூர் காவலர்களின் நற்பண்புகள் பற்றி சொல்வதற்கு இன்னும் எவ்வளவோ உள்ளன.

Content Via (AnbuCholan Muthuvel)

சிங்கப்பூர் காவலர்கள் பற்றிய உங்கள் அபிப்ராயத்தை, அனுபவத்தை கமெண்ட்ஸில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts