TamilSaaga

Breaking : சிங்கப்பூர் – திருச்சி : டிசம்பர் முதல் மார்ச் 2022 வரையிலான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டிக்கெட் புக்கிங் தொடக்கம்

வந்தே பாரத திட்டத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் சிங்கப்பூர் முதல் திருச்சி வரையிலான விமானங்களுக்கான முன்பதிவு எதிர்வரும் டிசம்பர் 2021, ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் 30 2022 வரை புக்கிங் நடைபெற்று வருவதாக நமது தமிழ் சாகா சிங்கப்பூர் செய்தி நிறுவனத்திற்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி கிடைத்துள்ளது. அதே போல சிங்கப்பூர் சென்னை மார்க்கமாக இயங்கவுள்ள ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் டிசம்பர் மற்றும் எதிர்வரும் மாதங்களுக்கு புக்கிங் ஏற்கனவே முடிந்து விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள் : இந்தியா – சிங்கப்பூர் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

மேலும் டிசம்பர் மாதம் 15ம் தேதி வரை சிங்கப்பூர் முதல் திருச்சி வரையிலான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டிக்கெட்கள் தீர்ந்துவிட்டதாகவும், மேலும் எதிர்வரும் மாதானலுக்கான டிக்கெட்கள் விரைந்து தீர்ந்துவருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஆகவே பயணிகள் விரைந்து டிக்கெட்களை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் வரும் 29 தேதி முதல் சிங்கப்பூர் தனது தடுப்பூசி போடப்பட்ட பயணப்பாதை திட்டத்தை இந்தியாவுடன் தொடங்கவிருப்பதால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் Scoot நிறுவன விமானங்களும் இந்தியா சிங்கப்பூர் இடையே இயக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் மூன்று நாள் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார். அவர் நமது போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் நிலையில் வர்த்தக விமானங்கள் இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே இயக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source : நந்தனா ஏர் ட்ராவல்ஸ் திருச்சி – 9600223091

Related posts