TamilSaaga

ஏஜெண்டுக்கு பணம் கொடுப்பதற்கு முன்.. ஒரேயொரு முறை இந்த இரண்டு “Focus Keywords” முயற்சி செய்து பாருங்க.. ஒரு ரூபா பணம் கொடுக்காமல் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்தது இப்படித்தான்!

SINGAPORE: நாம் மீண்டும் மீண்டும் சொல்லக் கூடிய ஒரு விஷயம், “ஏஜெண்ட்டுக்கு பணம் கொடுக்காமல் சிங்கப்பூருக்கு வேலைக்கு வர முடியும் என்பது”.. 100-க்கு 98 சதவிகிதம் பேர் ஏஜென்ட் மூலமாகத் தான் வேலைக்கு வருகிறார்கள் என்பதே எதார்த்த உண்மை. ஆனால், மீதமுள்ள 2 சதவிகிதத்தில் நீங்களும் ஒரு ஆளாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த செய்தி.

98% நபர்கள் ஏஜென்ட் மூலமாகத் தானே வந்து சம்பாதிக்கிறார்கள்..? அப்படியெனில் நானும் அப்படியே வந்துவிடுகிறேனே..? என்று நீங்க கேட்டால் அது அறியாமையின் வெளிப்பாடு தான். ஏனெனில், நீங்கள் சுயமாக முயற்சி செய்தால், உங்களிடம் திறமை இருந்தால், ஏஜென்ட்கள் தேவையே இல்லை.

யார் ஒருவர் சுயமாக சிங்கப்பூரில் வேலை தேட விரும்பாமல் மற்றவர்களின் உதவியை நாடுகிறார்களோ, யார் ஒருவர் எப்படியாவது வேலை கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்களோ, யார் ஒருவர் நோகாமல் எல்லாம் கைக்கு கிடைக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ, அவர்கள் தான் ஏஜெண்டுகளின் டார்கெட்.

இதற்காக நாம் ஏஜென்டுகளை குறை சொல்ல முடியாது. அவர்கள் தங்கள் வேலையைத் தான் செய்கின்றனர். தங்களிடம் உதவி கேட்டு வருவோர்களுக்கு தான் அவர்கள் வேலைக்கு ஏற்பாடு செய்து தருகின்றனர். சிலர் அதிகம் பணம் பெற்றாலும், சொன்னபடி வேலையை வாங்கிக் கொடுத்து விடுவார்கள். சிலர்.. பணத்தையும் வாங்கிக்கொண்டு வேலையும் வாங்கித் தராமல் ஏமாற்றும் போது தான், நாம் தடுமாறுகிறோம்.

சரி.. இப்போ விஷயத்துக்கு வருவோம்.. வெளிநாடுகளில் வேலை பெற உதவும் வெப்சைட்டுகள் குறித்து நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால், சிலர் அதில் எப்படி சரியான வேலைக்கு அப்ளை செய்வதென்று தெரியவில்லை.. சிங்கப்பூரில் தனக்கு ஏற்ற வேலையை அந்த தளங்களில் தேடுவது சிரமமாக இருப்பதாக நம்மிடம் கூறினார்கள். அவர்களுக்காக மட்டுமன்றி.. இதுபோன்ற வெப்சைட்டுகளில், உங்களுக்கு ஏற்ற வேலையை எப்படி தேட வேண்டும் என்று இந்த செய்தியை படிக்கும் அனைவருக்கும் உதவும் வகையில் சொல்கிறோம்.

Keywords:

கூகுள் என்ற தேடு தளமே keywords எனும் சக்கரத்தால் தான் சுழன்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் எந்த தேவைக்கு எப்படிப்பட்ட keywords கொண்டு தேடுகிறீர்களா, அதற்கேற்ற ரிசல்ட் தான் உங்களுக்கு கிடைக்கும். அதாவது, உங்களுடைய தேடுதலுக்கு ஏற்ற சரியான keywords கொடுக்கும் பட்சத்தில் தான், உங்களுக்கான சரியான ரிசல்ட் கிடைக்கும். Google பயன்படுத்தினாலும் சரி.. Bing தேடு தளம் பயன்படுத்தினாலும் சரி.. Focus Keywords என்ன என்பதே இங்கு பிரதானம்.

JobsDB, Indeed, JobStreet போன்ற வேலைவாய்ப்புக்கான தளங்களில் உங்கள் ரெஸ்யூம்களை அப்லோட் செய்துவிட்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு keywords-ஐ டைப் செய்து உங்களுக்கான வேலை வாய்ப்பை தேர்வு செய்யுங்கள்.

“Singapore Jobs”
“Jobs for Indians in Singapore”

இந்த இரண்டு keywords-ஐயும் Search-ல் கொடுத்து Enter தட்டுங்கள். சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு விவரங்களை உங்களால் காண முடியும். இந்த இரண்டு keywords மட்டுமின்றி, singapore jobs தொடர்பாக நீங்கள் வேறு எந்த keywords கொடுத்தாலும் உங்களுக்கு அதற்கான ரிசல்ட் கிடைக்கும். இந்தியர்களுக்கான வேலை என்று நீங்கள் குறிப்பிட்டு தேடும் போது, நீங்கள் எதிர்பார்க்கும் வேலை வாய்ப்பு கூட தென்படலாம்.

பொதுவாக, Google அதிகம் பயன்படுத்துவோருக்கு இது சாதாரண விஷயம் தான். ஆனால், நம்மிடம் உதவி கேட்ட பலருக்கும் இதுகுறித்த புரிதல் தெளிவாக இல்லை. எனவே அவர்களுக்காகவே இந்த செய்தி.

அதுமட்டுமின்றி, நமது நண்பர்கள் சிலரும் வேலை வாய்ப்பு தளங்கள் மூலம் வேலைக்கு அப்ளை செய்து, நேர்காணல் முடித்து, எந்த ஏஜெண்ட்டுக்கும் பணம் கொடுக்காமல் சிங்கப்பூரில் இன்று வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் இருந்தது ஜஸ்ட் மூன்றே மூன்று தகுதி தான்.

*கையில் ஒரு டிகிரி வைத்திருந்தனர்
*ஏற்கனவே இந்தியாவில் பணி அனுபவம் கொண்டிருந்தனர்
*ஆன்லைனில் “Search” செய்யும் பழக்கம் அதிகம் உள்ளவர்களாக இருந்தனர்.

இந்த மூன்று விஷயங்களும் அவர்களே நம்மிடம் சொன்னது. நீங்களும் முயற்சி செய்து பாருங்க!

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts