TamilSaaga

“சிங்கப்பூரில் 82 புதிய ஓமிக்ரான் வழக்குகள் உறுதி” – வெளிநாடுகளில் இருந்து வந்த 79 பேருக்கு தொற்று

சிங்கப்பூரில் நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 24) 265 புதிய COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 79 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 19க்குப் பிறகு முதல்முறையாக நாட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை சிங்கப்பூரில் 820 பேர் பெருந்தொற்றுக்கு இறந்துள்ளனர். வியாழக்கிழமை பதிவான 322 நோய்த்தொற்றுகளிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை வழக்கு எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதையும் படியுங்கள் : 10 நாட்களுக்கு மூடப்படும் சிங்கப்பூர் Anytime Fitness உடற்பயிற்சி நிலையம்

சிங்கப்பூரில் பதிவான புதிய வழக்குகளில், 186 உள்நாட்டில் பரவிய வழக்குகள். இதில் சமூகத்தில் 177 மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தங்குமிடங்களில் ஒன்பது பேர் உள்ளனர் என்று சுகாதார அமைச்சகத்தின் (MOH) இணையதளத்தில் சமீபத்திய தொற்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அதிர்ச்சி தரும் தகவலாக வெள்ளிக்கிழமை மொத்தம் 82 புதிய ஓமிக்ரான் வழக்குகள் உறுதி செய்யப்பட்டன, அவற்றில் 17 உள்ளூர் வழக்குகள் மற்றும் 65 பேர் வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் ஆவர்.

வெள்ளிக்கிழமை முதல், SGDF (S-gene Target Failure) சோதனைக்கு நேர்மறை சோதனை செய்யும் கோவிட்-19 வழக்குகள் கூடுதல் முழு மரபணு வரிசைமுறை (WGS) இல்லாமல் ஓமிக்ரான் வழக்குகளாக வகைப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. “எங்கள் உள்ளூர் அனுபவத்தின் அடிப்படையில், ஒரு நபர் SGTF க்கு நேர்மறை சோதனை செய்தால், அது ஒரு Omicron மாறுபாடாக இருக்கலாம்” என்று MOH தெரிவித்துள்ளது.

வாராந்திர தொற்று வளர்ச்சி விகிதம் 0.52 ஆக உள்ளது, இது வியாழன் 0.57 ஆக இருந்தது. இது கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில் சமூக வழக்குகளின் விகிதத்தைக் குறிக்கிறது. நவம்பர் 13 முதல் வளர்ச்சி விகிதம் 1க்குக் கீழேயே உள்ளது. 1க்குக் கீழே உள்ள புள்ளிவிவரம், புதிய வாராந்திர கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் குறிக்கிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சிங்கப்பூரில் 2,77,307 COVID-19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts