TamilSaaga

சிங்கப்பூருக்கு புதிதாக வந்திருக்கும் இளைஞர்கள் தமிழ்நாட்டை மிஸ் செய்யாமல் இருக்க வேண்டுமா? இதை படிங்க…

மிடில் கிளாஸ் வீட்டில் பொருளாதார பிரச்சனை என்றால் முதலில் யோசிக்கும் விஷயமே வெளிநாட்டில் போய் சம்பாரிக்கலாமே என்பது தான். அங்கே இங்கே கடனை வாங்கி கஷ்டப்பட்டு சிங்கப்பூர் வந்திருக்கும் தமிழர்கள் உங்க குடும்பத்திற்காக இங்கு சில விஷயங்களை செய்து தான் ஆக வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து கொண்ட கஷ்டப்படும் குடும்பத்தினருக்கும் சிங்கப்பூரில் உங்க வீட்டு பிள்ளை இதை செய்ய கூடாது. இதை செய் என அறிவுரை வழங்க இதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க.

தமிழ்நாட்டை சேர்ந்த மக்களுக்கு முதலில் வேண்டியது பாதுகாப்பு. இதனால் எப்போதுமே வெளிநாடு என்றால் அவர்களின் சாய்ஸ் பட்டியலில் சிங்கப்பூருக்கு முதன்மை இடம் உண்டு. இங்கிருந்தால் சொந்த மண்ணைப் போலவே உணரலாம். ஆனாலும், Low crime doesn’t mean No crime என சிங்கப்பூர் காவல்துறை சொல்வது போல எப்போதுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புது நாடு என்பதால் புது மனிதர்களிடம் கொஞ்சம் கவனத்துடன் பழகுவதும் முக்கியம்.

அச்சோ இங்கிலீஷ் தெரியலையே சிங்கப்பூரில் கஷ்டப்படணுமோ என சந்தேகமே வேண்டாம். ரயில் நிலையங்கள் முதல் பேருந்து நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் ஆங்கிலம், சீனம் மலாய் மொழிகளுடன் தமிழ் மொழியும் இருக்கும். இதனால் நீங்க கவலையே பட வேண்டும்.

புதுசா சிங்கப்பூருக்கு வரப்ப எதையாது பயன்படுத்திவிட்டு கண்டபடி தூக்கி எறிந்து விடாதீர்கள். அப்புறம் அபராதம் கடுமையா இருக்கும். அடுத்து எல்லா சிங்கப்பூரில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய இடம் லிட்டில் இந்தியா. இங்கு தான் நிறைய இந்தியர்கள் பிசினஸ் செய்து வருகிறார்கள். இங்கு நிறைய இந்திய நண்பர் கூட்டம் அவ்வப்போது அமர்ந்து கதை பேசுவதையும் உங்களால் பார்க்க முடியும்.

சிங்கப்பூர் பல வகையான உணவுமுறைகளை கொண்டது. தமிழ்நாட்டை சேர்ந்த முன்னணி நிறுவன ஹோட்டல்கள் இங்கு இருக்கிறது. ஆனால் விலை ரொம்ப ஜாஸ்தி என்பதை மறந்திட கூடாது.

இதுப்போல சிங்கப்பூர் உங்களுக்கு எப்போதுமே நிறைய நிறைய அனுபவங்களை கொடுத்தாலும், சில கசப்பையும் கொடுக்கும். உங்களின் உடமைக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நீங்க தான் பொறுப்பு. கவனமாக இருக்க கற்றுக்கொண்டு சிங்கப்பூர் வந்தால் வாழ்க்கை வெற்றி தான்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts