TamilSaaga

“சிங்கப்பூர் துவாஸ் எரிப்பு ஆலை தீ விபத்து” : மேலும் ஒரு அதிகாரி சிகிச்சை பலனின்றி பலி

சிங்கப்பூரில் கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 23) துவாஸ் எரிப்பு ஆலையில் உள்ள மின் சுவிட்ச் அறையில் நடந்த வெடிப்பு காரணமாக ஒருவர் இறந்துள்ளார். மற்றும் இரண்டு பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தை தடுக்க தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) அப்போது வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுற்றுச்சூழல் முகமை (NEA) அதிகாரி இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 26) காலை உயிரிழந்தார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இறந்த அந்த அதிகாரி, ஒரு நிர்வாக பொறியியல் மேலாளர் என்றும், சுவிட்ச் கியர் அறையில் மற்ற இருவருடன் வெடிப்பு நிகழ்ந்தபோது அவர் அங்கிருந்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வெடிப்பில் இறந்த இரண்டாவது நபர் இவரென்பது குறிப்பிடத்தக்கது, மேலும் காயமடைந்த மூன்றாவது அதிகாரியான எஞ்சினியரிங் மேனேஜருக்கு தற்போது மருத்துவமனையின் ICU வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மூன்று அதிகாரிகளும் சிங்கப்பூரர்கள் என்று நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ வியாழக்கிழமை கூறியது குறிப்பிடத்தக்கது. அந்த அதிகாரிகளின் குடும்பத்தோடு அடிக்கடி தொடர்பு கொண்டு அவர்களுக்கு வேண்டியதை செய்துவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“சுவிட்ச் கியர் அறையில் இருந்த அந்த மூன்று NEA அதிகாரிகளும் ஆலையின் மின் பராமரிப்பு கிளையின் மூத்த உறுப்பினர்கள் ஆவர். ஒவ்வொருவரும் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் உள்ளனர், மேலும் பல ஆண்டுகளாக (Tuas எரியூட்டும் தொழிற்சாலையில்) பங்களிப்பு செய்துள்ளனர்” என்று NEA தனது பதிப்பில் தெரிவித்துள்ளது.

Related posts