TamilSaaga

அன்புக்கு விலை ஏது? : தாய்மாமன் சிலை மடியில் காதுகுத்திக்கொண்ட குழந்தைகள் – ஊரே வியக்க நடந்த நெகிழ்ச்சியான விழா

பெரும் தலைவர்கள், நடிகர் நடிகைகள் போன்ற பலரின் மெழுகு சிலைகளை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் ஏன் பல முறை அதை பார்த்திருப்போம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தங்களை விட்டு நீங்கிய தங்கள் நெருங்கிய சொந்தங்களின் மெழுகு மற்றும் சிலிக்கான் சிலைகளை அவர்களது குடும்பத்தினர் வடிவமைத்து தங்களோடு வைத்துக்கொள்ளும் நிகழ்வுகளை குறித்து நிச்சயம் நாம் அவ்வப்போது வசித்து வருகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் காணாமல்போன “தமிழக தொழிலாளியின் Work Permit” – ஒன்றிணைந்து கண்டுபிடித்துத்தர முயற்சிப்போம்!

பொருளாதார ரீதியாக பார்த்தாலும் இது கொஞ்சம் கடினமான விஷயம் தான், ஏன் என்றால் தத்துரூபமாக ஒருவரின் சிலிக்கான் சிலையை செய்ய லட்சங்களில் செலவாகும். ஆனால் அன்புக்கு ஏது விலை என்ற கூற்றை இதுபோன்ற நிகழ்வுகள் நிரூபிக்கின்றது என்றே கூறலாம். இந்த பதிவிலும் பணத்தை கடந்த ஒரு பாசத்தைத் தான் நாம் காணவிருக்கிறோம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் தான் பாண்டித்துரை, இவர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் காலமானார். இந்நிலையில் அவர் இறப்பதற்கு முன்பு அவருக்கு இருந்த ஒரு ஆசையை நிறைவேற்றத்தான் அவருடைய சிலிக்கான் சிலையை பல லட்சம் செலவு செய்து உருவாக்கியுள்ளனர் அவரது குடும்பத்தினர். தாய்க்கு நிகரானவன் தாய் மாமன் என்பார்கள், அந்த தாய் மாமனுக்கு தன் சகோதரிகளின் பிள்ளைகள் என்றால் ஒரு தனி பாசம் தான். பாண்டிதுரைக்கும் அவரது சகோதரி பிரியதர்ஷினி மீதும் அவர் பிள்ளைகள் மீதும் பாசம் அதிகம்.

பிரியதர்ஷினிக்கு தாரிகா என்ற மகளும் குமரன் என்ற மகனும் உண்டு, சகோதரியின் இவ்விரு குழந்தைகளுக்கு தனது மடியில் வைத்து காதுகுத்த வேண்டும் என்பதே இறந்த பாண்டிதுரைக்கு இருந்த ஆசை. ஆகவே அவர் இறந்த பிறகும் அவருடைய ஆசையை நிறைவேற்றத் தான் சிலிக்கான் கொண்டு அவருடைய சிலை செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் செய்யப்பட்ட அவருடைய தத்ரூபமான சிலை ஒட்டன்சத்திரம் கொண்டுவரப்பட்டது. மேலும் இந்த காதணி விழாவின்போது சாரட் வண்டியில் தாய்மாமன் சிலையுடன் மருமகனும் மருமகளும் ஊரை வலம்வந்தனர்.

அதன்பிறகு ஒட்டன்சத்திரத்தில் அந்த சிலிகான் சிலையின் (பாண்டிதுரையின்) மடியில் அமரவைத்து இருவருக்கும் காது குத்தப்பட்டது. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறியபோது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாண்டித்துரை இறக்கும் முன்பு தனது சகோதரியின் மகன் மற்றும் மகளுக்கு தன் மடியில் வைத்துத் தான் காது குத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதை நிறைவேற்றவே தற்போது அவரை போன்ற உருவம் கொண்ட சிலையை வைத்து அந்த சடங்குகள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்கள்.

சிங்கப்பூரில் கையில் வாளுடன் அனைவரையும் மிரட்டிய நபர் : தடுக்கி விழுந்ததும் “வச்சு செய்த” பொதுமக்கள் – பிரம்படி கிடைக்க வாய்ப்பு

இந்த சிலையை செய்ய 5 லட்சம் ஆனபோதும் தங்களுக்கு இந்த நிகழ்வு மிகப் பெரிய மன அமைதியை தருவதாக அவர்கள் கூறினர். ஒட்டன்சத்திரத்தில் நடந்த இந்த அதிசய நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உண்மையில் அன்புக்கு எந்த எல்லையும் இல்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts