TamilSaaga

சிங்கப்பூரில் முட்டை வாங்கினால் கவனமாக வாங்குங்க… பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை!

உக்ரைன் நாட்டுப் பண்ணைகளில் இருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளில் சால்மோனல்லா எனப்படும் கிருமிகள் கண்டறியப்பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சிங்கப்பூர் அரசு அவற்றை திருப்பி அனுப்புவதாக அறிவித்துள்ளது. இந்த வகை கிருமிகளானது உட்பகுதி மற்றும் தோல் ஆகிய இரண்டிலும் இருக்கக்கூடும் எனவும் பச்சை முட்டை மற்றும் நன்கு சமைக்கப்படாத முட்டைகளிலும் உயிர்வாழும் திறன் இந்த கிருமிக்கு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உட்கொள்ளும் பட்சத்தில், கிருமி உடலை தாக்கினால், வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். மேலும் இந்த கிருமிகளானது முதியோர், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை எளிதாக தாக்கும் தன்மை உடையது.

இந்த வகை முட்டைகளில் ‘சி இ யுஏ 001’ என்ற முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும் எனவும், இந்த பிரச்சனை முடியும் வரை சிங்கப்பூர் அரசு இந்த முட்டைகளை இறக்குமதி செய்யாது எனவும் அறிவித்துள்ளது. எனவே, கடைகளில் முட்டைகளை வாங்கும் பொழுது கவனமாக வாங்க வேண்டும் எனவும், அவற்றினை முறையாக வேகவைத்து உண்ண வேண்டும் எனவும் மக்களை எச்சரித்துள்ளது.

Related posts