TamilSaaga

சிங்கப்பூரில் தனியார் பள்ளி மேலாளர் : பணிக்கு வந்த பெண் ஊழியருக்கு பாலியல் சீண்டல் – 6 மாதம் சிறை

சிங்கப்பூரில் தனியார் பள்ளியின் பொது மேலாளராக இருந்த 71 வயது முதியவர் ஒருவர் அந்த பள்ளிக்கு பணிக்கு வரும் புதிய பெண் பணியாளர்களுக்கு பாலியல் சீண்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. வேலை விஷயங்களைப் பற்றி விவாதிக்க, மத்திய உணவு வேளையில் அவர்களை சந்தித்து அவர் தவறாக ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட அவருக்கு இன்று புதன்கிழமை (செப்டம்பர் 15) 6 மாத சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

பாலியல் ரீதியான இரண்டு விதமான குற்றங்களை தான் செய்ததாக தனது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாக்க அந்த குற்றவாளி மற்றும் அந்த பள்ளியின் பெயர் வெளியிடப்படவில்லை. நீதிமன்ற ஆவணங்களின்படி, சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 32 வயதான அந்த பாதிக்கப்பட்டவரைச் சந்தித்து, நான்கு நாட்களுக்குப் பிறகு அவள் வேலையைத் தொடங்குவதற்கு முன் வேலை நடைமுறைகளை விளக்குவதற்காக, அக்டோபர் 3, 2019 அன்று மதிய உணவுக்காக அந்த நபர் ஏற்பாடு செய்துள்ளார்.

ரோச்சோர் MRT ஸ்டேஷனில் உள்ள உணவகத்தில் மதிய உணவின் போது, ​​பாதிக்கப்பட்டவரின் மொபைல் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதை அறிந்த அந்த நபர், அவரால் பில் செலுத்த முடியாததை அறிந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கைகளைப் பிடித்து, அந்த பில்லுக்கு அவர் பணம் செலுத்த முன்வந்துள்ளார். “மேலும் உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது”, என்று கூறி பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பின் புறம் தடவியுள்ளார்.

அவரிடம் நாசுக்காக பேசிய அந்த பெண், தனக்கு கிடைத்த அந்த வேலைக்காக தான் நன்றியுள்ள பெண்ணாக இருப்பேன் என்று அவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மதிய உணவுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர் தனது வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவர்கள் பள்ளிக்குச் சென்றனர். அப்போது மாலில் உள்ள ஒரு கண்ணாடி லிப்டில், அந்த நபர் பாதிக்கப்பட்டவருக்கு அருகில் நின்று அவளது மார்பகத்தில் கைகள் படும்படி வருடியுள்ளார் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

அதன் பிறகு அந்த பெண்ணை கட்டியணைத்து உதட்டில் முத்தமிட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த மனிதனுக்கு இரண்டு வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அந்த மனிதனுக்கு 50 வயதுக்கு மேல் இருப்பதால் அவரை பிரம்பால் அடிக்க முடியாது.

Related posts