TamilSaaga

1 லாரி.. 1 பஸ்.. 1 வேன்.. 9 கார்கள் – சிங்கப்பூர் சாலையில் இன்று நடந்த “மெகா Accident” – ஒரே விபத்தில் 12 வாகனங்கள் காலி! ஆடிப்போன சிங்கை – மலேசிய அரசுகள்!

SINGAPORE: இன்று (ஜூலை 7) காலை மலேசியாவில் இருந்து உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்லும் வழியில், வரிசையில் நின்று கொண்டிருந்த பல கார்கள் மற்றும் வாகனங்கள் மீது லாரி ஒன்று மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், ஒட்டுமொத்த விபத்துக்கு காரணமாக அமைந்த லாரியின் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விபத்தையடுத்து குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ஐசிஏ), இன்று காலை 10:25 மணிக்கு, காஸ்வேயில் உள்ள மூன்று பாதைகளில் இரண்டு தடைசெய்யப்பட்டதாகக் கூறியது.

இந்த சூழலில், லாரியின் டிரைவர் கைது செய்யப்பட்டதாக Johor போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

லாரியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே விபத்துக்குக் காரணம் என ஜோகூர் போலீசார் மலேசிய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் அந்த லாரி, பேருந்து, வேன் மற்றும் ஒன்பது கார்கள் என மொத்தம் 12 வாகனங்கள் சிக்கின. இதில் பாதி வாகனங்கள் மலேசியாவைச் சேர்ந்தவை, மற்றவை வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டவை.

பேருந்து சிங்கப்பூரைச் சேர்ந்த SBS Transit பேருந்தாகும். ஆனால், நல்வாய்ப்பாக விபத்தின் போது பேருந்தில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் SBS Transit தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் “சாலைப் பயணம் என்பது பாதுகாப்பு மற்றும் உயிர்களை உள்ளடக்கியது. பலர் சாலையில் பயணம் செய்கின்றனர். அதற்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக தவறு செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், லாரி ஓட்டுநருக்கு சிறுநீர் பரிசோதனை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

தவறு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால். ஓட்டுநர் உரிமம் மற்றும் அவரது நிறுவனத்தின் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

விபத்து நடந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் விசாரணைக்கு உதவ ஆதாரங்களுடன் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts