TamilSaaga

போலி ஆவணங்கள்.. சிங்கப்பூரில் ஐந்து வங்கிகளை ஏமாற்றி 10 மில்லியன் மோசடி – நிறுவன தலைவர் கைது

சிங்கப்பூரில் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக, இப்போது கலைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருந்த ஒருவர், ஐந்து வங்கிகளை ஏமாற்றி 10 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை நடத்தியுள்ளார். இதனையடுத்து சியோ தியோங் என்ற 61 வயது நபர் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14) அன்று தன மீது சுமத்தப்பட்ட 25 மோசடி குற்றச்சாட்டுகளை நீதி மன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

நாளை வியாழக்கிழமை (செப்டம்பர் 16) வெளியாகவுள்ள தீர்ப்பின் போது இதே போன்ற மேலும் 50 குற்றச்சாட்டுகளை மூத்த மாவட்ட நீதிபதி பாலா ரெட்டி கருத்தில் கொள்வார் என்று கூறப்படுகிறது. கடந்த 2007 மற்றும் 2011ம் ஆண்டுக்குள், பாதிக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து வர்த்தக நிதியுதவிக்கு விண்ணப்பிக்க மோசடி ஆவணங்களைப் பயன்படுத்திய குற்றங்களை செய்துள்ளார் அந்த நபர். அவரால் ஏமாற்றப்பட்ட வங்கிகள் சாங் ஹ்வா வணிக வங்கி, யுனைடெட் ஓவர்சீஸ் வங்கி, ஓசிபிசி வங்கி, மே பேங்க் மற்றும் ஏபிஎன் அம்ரோ வங்கி ஆகும்.

அந்த நேரத்தில், எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான SPE டெக்னாலஜியின் (சிங்கப்பூர்) இயக்குநராக அவர் இருந்துள்ளார். மேலும் அதில் 38 சதவீத பங்கு வைத்திருந்த நிலையில் அந்த நிறுவனம் ஜனவரி 24, 2015 அன்று கலைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 27, 2007 மற்றும் ஜனவரி 11, 2011-க்கு இடையில், எஸ்பிஇ டெக்னாலஜியின் பல்வேறு பொருட்களை வாங்குவதை பிரதிபலிக்கும் வகையில் 75 இன்வாய்ஸ்களையும் அதனுடன் தொடர்புடைய டெலிவரி ஆர்டர்களையும் தயாரிக்குமாறு எஃப்எஸ்எல் -க்கு அறிவுறுத்தப்பட்டது.

மோசடி மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்தை வழங்க மற்றொரு நபரைத் தூண்டிய ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும், குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts