இக்கால இளைஞர்களின் அறிவியல் திறமை என்பது விண்ணை முட்டும் அளவிற்கு வளர்ந்து வருகிறது என்றால் அது சற்றும் மிகை அல்ல. இந்நிலையில் உலக அளவில் முதல் முறையாக கேமரா வடிவத்தில் ஒரு நகரக்கூடிய காரை உருவாக்கி அசத்தியுள்ளார் திருச்சியை சேர்ந்த தமிழினியன் என்ற இளைஞர். தமிழினியன் தற்போது இந்தியாவில் குறிப்பாக தமிழ் சினிமா பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட கேமரா தினத்தை முன்னிட்டு இந்த படைப்பினை அவர் வெளியிட்டுள்ளார். முழுக்க முழுக்க உள்ளூரில் கிடைத்த பொருள்களைக் கொண்டு இந்த காரை தமிழினியன் உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த காரை சிங்கப்பூரில் உள்ள வின்டேஜ் கேமரா மியூசியத்தில் வைக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வு குறித்து பிரபல ANI நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழினியன் இந்த காரை திருச்சியில் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு உருவாக்கி உள்ளார் என்றும், வழக்கமான முறையை சார்ந்தது அல்லாமல் Bellows கேமரா லென்சை சார்ந்து இந்த காரை வடிவமைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
“மேலும் சிங்கப்பூர் விண்டேஜ் கேமரா மியூசியத்தில் இருந்து பிரத்தியேகமாக இவர்களுக்கு ஆர்டர் கிடைக்கப் பெற்றதாகவும். கேமரா சம்பந்தமாக நிறைய கலைப்பொருட்கள் தங்களிடம் உள்ளதால், வித்தியாசமான ஒன்றை எதிர்பார்ப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மியூசியத்தில் நகரகூடிய முறையில் ஒரு கேமரா வாகனம் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்றும் இனியன் ANI-யிடம் தெரிவித்துள்ளார்.