TamilSaaga

லக்கி பிளாசா விபத்து.. இரண்டு பெண்கள் மரணம் – ஓட்டுநர் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்ப்பு

சிங்கப்பூரில் இரண்டு பெண்கள் இறந்த 2019ம் ஆண்டு “லக்கி பிளாசா” விபத்து சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் வரும் செப்டம்பர் 24ம் தேதி அன்று நடைபெற உள்ள நீதிமன்ற அமர்வில் அவர் எதிர்கொண்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. சோங் கிம் ஹோவிடம் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 20) நடந்த விசாரணைக்கு பிறகு இந்த தகவல் வெளியாகியுள்ளது.

65 வயதான மலேசியர், கடந்த மாதம் அவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டார். ஆனால் நீதிமன்ற ஆவணங்களின் சில பகுதிகளை அவர் சர்ச்சைக்குள்ளாக்கியதால், அப்போது எந்த மனுவும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. சிங்கப்பூர் நிரந்தர குடியிருப்பாளரான சோங், கடந்த 2019ல் லக்கி பிளாசா அருகே காரை ஓட்டிச் சென்றபோது, ​பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 6 பெண்களின் மீது மோதினர். இதில் இரண்டு பெண்கள் மரணித்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், அவர் மீது மூன்று ஆபத்தான வகையில் வாகனங்களை ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. டிசம்பர் 29, 2019 அன்று மாலை 5 மணியளவில் ஆர்ச்சர்ட் சாலை ஷாப்பிங் மால் அருகே Nutmeg சாலையில் அவர் யு-டர்ன் செய்துகொண்டிருந்த நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் சிக்கிய 6 பெண்களும் வீடுகளில் உதவியாளர்களாக பணிபுரிந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 6 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட ஆன்லைன் நிதி திரட்டலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3,60,000க்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts