TamilSaaga

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல நடிகர் ராம் சரண் : படத்தின் வில்லன் இவர்தானா? சுவாரசிய தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் தலைசிறந்தவராக விளங்குகிறார் இயக்குனர் ஷங்கர் என்றால் அது மிகையல்ல. 1963ம் ஆண்டு தஞ்சை தரணியில் உள்ள கும்பகோணத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த இவர் பிற்காலத்தில் எஸ்.ஏ சந்திரசேகர் அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.

அதனை தொடர்ந்து 1993ம் ஆண்டு பிரபல நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் தனது இயக்குனர் பயணத்தை தொடங்கினார். காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை அளித்த சங்கர் இன்று தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமா அரங்கில் தமிழ் திரைப்படங்களின் பெயரை பதிவு செய்ய காரணமாக இருக்கிறார்.

இயக்குனராக மட்டுமில்லாமல் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி, வெயில், காதல் போன்ற பல சிறந்த திரைப்படங்களை தயாரித்து தமிழ்சினிமாவுக்கு வழங்கியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “எந்திரன்” திரைப்படம் உலக அரங்கில் தமிழ் சினிமாவை உயர்த்தியது என்றால் அது மிகையல்ல.

இந்நிலையில் கமல்ஹாசன் அவர்கள் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் இந்த நேரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் அவர்களை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை ஷங்கர் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் அவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts