தீபாவளி திருநாளன்று சிங்கப்பூரில் சிலோன் சாலையில் அமைந்துள்ள செண்பக விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுவாக நம் ஊர்களில் தீபாவளி என்றாலே காலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து கோவிலுக்கு செல்வது வழக்கம்.
அதன் பிறகு குடும்பத்தோடு அமர்ந்து ஒன்றாக உணவருந்துவோம்.ஆனால் வெளிநாட்டு வாழ்க்கையில் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது .முடிந்த அளவிற்கு புத்தாடை அணிந்து உடன் சேர்ந்து அருகிலுள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு நம் தீபாவளியை கழிப்போம். தீபாவளி அன்று நவம்பர் 12ஆம் தேதி காலை 5.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி துவங்கும் என கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன் பிறகு வரிசையாக ஒவ்வொரு பூஜையும் நடைபெற்று மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தீபாவளி பூஜையில் கலந்து கொண்டு விநாயகரின் அருளை பெறுமாறு கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.