TamilSaaga

பேனர் வெச்சது ஒரு குத்தமா… சிங்கப்பூரில் உடனடியாக அகற்றப்பட்ட சர்ச்சைக்குரிய தீபாவளி பேனர்..!

சிங்கப்பூர் என்றாலே சுத்தத்திற்கு பேர் போன ஊர். நம்ம ஊர்களில் தீபாவளி என்றாலே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு திருவெங்கிலும் பட்டாசு குப்பைகள் தான் இருக்கும்.ஆனால் சிங்கப்பூர் காரர்களுக்கு இது மிகவும் புதிதாகும். ஏனென்றால் சிங்கப்பூரின் எந்த பகுதிகளிலும் நாம் குப்பைகளை காணவே முடியாது. ஆனால் சிங்கப்பூரில் வாழும் சில இந்தியர்கள் தீபாவளி கொண்டாட்டத்தின் பொழுது பட்டாசுகளை வெடித்து அதை குப்பைத் தொட்டிகளில் போடாமல் தெருவில் அப்படியே விட்டு செல்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுகின்றது என்ற கருத்து சிங்கப்பூரில் எழுகின்றது. எனவே தீபாவளி கொண்டாட்டத்தின் பொழுது சேரும் குப்பைகளை அப்புறப்படுத்துமாறு மவுண்ட் பாட்டன் பகுதியில் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

அதன் அருகில் தீபாவளி கொண்டாட்டத்திற்கான பேனரும் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் குப்பைகளை அகற்றுமாறு வைக்கப்பட்டிருந்த பேனர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அது குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் கொண்டாடும் கொண்டாட்டத்தை குறை கூறும் படி உள்ளது என பலர் கருத்துக்களை தெரிவித்ததால் பேனர் அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து எதிர்தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் தீபாவளி கொண்டாட்டத்திற்கான பேனரில் எந்த உள்நோக்கம் இல்லை எனவும் அவை குப்பைகளை அகற்றும் நோக்கத்தில் தான் வைக்கப்பட்டுள்ளது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் எனவும் வாழ்த்து தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Related posts