TamilSaaga

சிங்கப்பூரில் இறந்த தொழிலாளி குமரவேல் ராஜா – திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தினம் ஒரு ஊழியரின் “பிணம்”

கடந்த 2021ம் ஆண்டு நாம் மறக்கவே முடியாத சம்பவங்களில் ஒன்று குமரவேல் ராஜாவின் மரணம் தான். திருப்பத்தூர் மாவட்டம், உமையப்பநாயக்கனூரை சார்ந்த ராஜா அப்புக்கவுண்டரின் மகன் குமரவேல் ராஜா என்பவர் சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற இடத்தில் 03.11.2021 அன்று இறந்துவிட்டார்.

நவம்பர் 3ம் தேதி அன்று மதியம் 2 மணியளவில் மயங்கி விழுந்த குமரவேல், அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

New Year 2022 Exclusive: தேக்காவில் ஹோட்டல் வைத்துள்ள தமிழர் – வரிசையில் நின்று உணவு வாங்கும் சிங்கப்பூர் போலீஸார்

அவரது உடலை எப்படி இந்தியாவிற்கு கொண்டு வருவது என்று புரியாமல் உறவினர்கள் தவித்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோவின் மகன் துரை வைகோ சிங்கப்பூரில் உள்ள தனது நண்பர் யாஸீன் மூலம், மருத்துவமனை விதிகளுக்கு உட்பட்ட நடவடிக்கைகளை முடித்து, இறந்துபோன குமரவேல் ராஜா உடலை, நவ.6 ம் தேதி காலை 6 மணிக்கு திருச்சி விமான நிலையம் கொண்டு வந்து சேர்த்தார். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம், குமரவேல் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுச் செல்லப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிங்கப்பூர் ஊழியர்கள் அனைவரையும் இந்த சம்பவம் வெகுவாக பாதித்தது. இதுகுறித்து நாம் திருச்சி விமான நிலையத்தில் அமைந்துள்ள டிராவல்ஸ் நிறுவனமான நந்தனா ஏர் டிராவல்ஸை தொடர்பு கொண்டு பேசினோம்.

“சிங்கப்பூரில் கட்டுக்கட்டாக சிக்கிய வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள்” : ஒரு வெளிநாட்டவர் உள்பட நான்கு பேர் கைது

அப்போது, அவர்கள் சொன்ன தகவல் நமக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர்கள் பேசிய போது, “சிங்கப்பூரில் இருந்து தினம் வந்திறங்கும் ஃ பிளைட்டில் குறைந்தது ஒரு டெட்பாடியாவது வந்துவிடும். இது அடிக்கடி நிகழும் சம்பவம் தான். ஆனால், பெரிதாக வெளியே தெரியாது. குமரவேல் விவகாரத்தில், இந்த சம்பவம் சமூக தளங்களில் வெளியானதால் உங்களுக்கும் தெரிந்திருக்கிறது. மற்றபடி, சிங்கப்பூரில் ஏதாவது ஒரு காரணத்தால் இறக்கும் ஊழியர்களின் உடல்கள், அடிக்கடி விமானங்களில் கொண்டு வரப்படும்” என்றனர்.

குமரவேல் மரணத்தில் அரசியல் பின்புலம் உள்ள துரை வைகோ ஈடுபட்டதால், அந்த விஷயம் வெளியே தெரிந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், வெளியே தெரியாத பல சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என்பது நிதர்சனம். இப்போது வரை குமரவேல் எதனால் இறந்தார் என்ற தெளிவான தகவலோ, அறிக்கையோ வெளியாகவில்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts