சிங்கப்பூரில் வேலை செய்தால் வாழ்க்கை மாறிவிடும் என்று இன்னும் பல இளைஞர்கள் நம்பிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் சம்பளம் மட்டுமல்ல இங்கு இருக்கும் வாழ்க்கை தான். தமிழ்நாட்டில் இருக்கும் உணர்வை கொடுப்பது போல நிலைய தமிழ் முகங்களை உங்களால் இங்கு பார்க்க முடியும். சரி வேலைக்கு வருவோம். படித்தால் ஒரு வகை, படிக்கவில்லை என்றால் ஒரு வகை என சிங்கப்பூர் வேலைக்கு ஏகப்பட்ட பாஸ்கள் நடைமுறையில் இருக்கிறது.
டிகிரி அல்லது டிப்ளமோ வைத்து வேலைக்கு வந்தாலும் சிலருக்கு இன்னும் சொற்ப சம்பளமே கிடைக்கிறது. அவர்கள் மாதிரியே படிக்காமல் சிங்கப்பூர் வேலைக்கு வந்திருப்பவர்களும் எதுவும் கோர்ஸ் செய்து வேலைக்கு மாறினால் சம்பளம் அதிகமாக கிடைக்கும் என நம்புகிறார்கள். உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால் இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். கை நிறைய சம்பளத்தில் சிங்கப்பூரிலேயே கோர்ஸ் முடித்து விட்டு வேலைக்கு செல்லும் ஒரு கோர்ஸ் பற்றிய தகவல்கள் தான் இருக்கிறது.
இதையும் படிங்க: மார்ச் மாதம் சிங்கப்பூர் வரும் இந்திய பயணிகளா நீங்க… இந்த முறை இந்த டாக்குமெண்ட் தேவையே இல்லை… முக்கிய Doc லிஸ்ட் இங்கே!
சிங்கப்பூர் Lifting supervisor. முதலில் இந்த வேலை எப்படி இருக்கும் என்றால் பெரிய பெரிய கட்டிட வேலைகளில் பொருட்களை தூக்க க்ரேனை செயல்படும். அதை சூப்பர்வைஸ் செய்பவர் தான் Lifting supervisor. க்ரேன் ஆபரேட்டர் இவரின் வழிகாட்டுதல் படி தான் இயங்க வேண்டும். இந்த கோர்ஸினை படிக்க 350 சிங்கப்பூர் டாலர் முதல் 450 சிங்கப்பூர் டாலர் வரை செலவுகள் இருக்கும்.
நான்கு நாட்கள் இதற்கு வகுப்புகள் நடக்கும். கம்பெனி தரப்பில் இருந்து உங்களை படிக்க அனுப்பும் போது தொடர்ச்சியாக நான்கு நாட்களில் முடித்து விடலாம். நீங்க தனியாக படிக்க நினைத்தால் வார இறுதி நாட்களில் கூட சென்று படிக்கலாம். ஞாயிறு மட்டும் என்றால் தொடர்ச்சியாக 4 ஞாயிறு செல்ல வேண்டும். தமிழில் தேர்வு எழுத முடியாது. கண்டிப்பாக ஆங்கிலம் படிக்கவும், எழுதவும் தெரிய வேண்டும். ஏனெனில், எழுத்து தேர்வு தான் இருக்கும். டிக் செய்யும்படி தேர்வு இருக்காது.
இதையும் படிங்க: நர்ஸிங் படிச்சிருக்கீங்களா… உங்களுக்கு பட்டு கம்பளம் விரித்திருக்கிறது சிங்கப்பூர்… ஆயிரக்கணக்கான பணியிடங்கள்… PRம் கொடுக்க ஐடியா!
இந்த கோர்ஸினை படிக்க Rigging and Signalman course அல்லது Marine Rigger and Signalman course முடித்திருக்க வேண்டும். குறைந்தது இந்த துறையில் 3 மாத பணி அனுபவம் இருக்க வேண்டும். வயது கண்டிப்பாக 21க்கு மேல் இருக்க வேண்டும். கோர்ஸினை முடித்ததும் இந்த தகுதியை வைத்து அந்த கம்பெனியிலோ அல்லது வேறு கம்பெனிக்கோ சூப்பர்வைசராக செல்ல முடியும்.
இதை முடித்துவிட்டு வேலைக்கு செல்லும் ஊழியர்களுக்கு சம்பளமாக ஒரு நாளைக்கு 30ல் இருந்து 40 சிங்கப்பூர் டாலர் வரை சம்பளம் கிடைக்கும். Rigging and Signalman செயல்படுவது உங்கள் பொறுப்பு. க்ரேன் மூலமாக பணியிடத்தில் விபத்து நடக்கும் போது முதலில் உங்களை தான் கேள்வி எழுப்புவார்கள். அந்த வகையில் இந்த வேலைக்கு பொறுப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.