TamilSaaga

சிங்கப்பூர் Upper Changi பகுதி.. கண்மூடித்தனமாக சாலையை கடக்க முயன்ற நபர்.. துரிதமாக செயல்பட்ட ஓட்டுநரால் தடுக்கப்பட்ட விபத்து – வெளியான Video

சிங்கப்பூர், சாலை விதிகளை பொறுத்தவரை அவற்றை மிகவும் கண்டிப்பாக கடைபிடிக்கும் நாடுகளில் ஒன்று என்று தான் கூறவேண்டும். இந்த வகையில் Statista என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரப்படி சிங்கப்பூரில் கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் 107 பேர் சாலை விபத்தில் மரணித்துள்ளனர்.

மேலும் இந்த சாலை விபத்துகளில் பெரிய அளவில் பாதிக்கப்படுவது இரு சக்கர வாகன ஓட்டிகள் தான் என்பது வேதனை தரும் செய்தியாக உள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர் Upper Changi சாலையில், மின்னல் வேகத்தில் சாலையை கடக்க முயன்ற ஒரு இருசக்கர வாகன ஓட்டி நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இந்த விபத்து குறித்த காணொளி Sg Road Vigilante என்ற முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. வெளியான அந்த வீடியோவில் Upper Changi சாலையில் ஒரு கார் சென்றுகொண்டிருக்கிறது. அப்போது சாலையின் இடது புறத்தில் ஓரமாக நின்றுகொண்டிருக்கும் லாரியின் பக்கவாட்டில் இருந்து சாலையை நோக்கி ஒரு வாலிபர் சைக்கிளில் வேகமாக வருகின்றார்.

இந்தியாவிற்கான பயணிகளின் அளவை அதிகரிக்கும் Singapore Airlines.. களமிறங்க காத்திருக்கும் Airbus A380 – பல Exclusive தகவல்கள்

சட்டென்று கார் வருவதை கண்ட அந்த நபர் தனது சைக்கிளை சட்டென்று வளைக்க நிலை தடுமாறி கீழே வில்லுகின்றார். எதிரே வந்த கார் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு அவர் மீது மோதாமல் சாலையின் வலதுபுறத்தில் சென்று காரை நிறுத்துகிறார்.

விபத்தின் காணொளி – Video Courtesy Sg Road Vigilante

உண்மையில் வேறு வாகனம் எதுவும் பின்னால் வராத நிலையிலும் அந்த கார் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதாலும் பெரிய அளவில் ஏற்படவேண்டிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது என்றே கூறலாம். அண்மைக்காலமாக பல வாகனஓட்டிகள் முறையாக விதிகளை பின்பற்றாததால் விபத்தில் சிக்கிக்கொள்வது வாடிக்கையாக உள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts