சிங்கப்பூரில் வேலைக்கு வரும் இந்திய பயணிகள் தொடங்கி சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் வரை ஏறக்குறைய எல்லாருக்குமே ஒரே மாதிரியான டாக்குமெண்ட்ஸினை தான் சிங்கப்பூர் இமிகிரேஷன் அதிகாரிகள் கேட்டு வருகின்றனர். அந்த வகையில் சிங்கப்பூரின் கொரோனா நடவடிக்கைகள் அனைத்துமே தளர்த்தப்பட்ட நிலையில் சிங்கப்பூர் வர எடுத்து வர வேண்டிய டாக்குமெண்ட் லிஸ்ட்டில் மாற்றம் வந்துள்ளது.
சிங்கப்பூரில் வேலைக்காக வரும் ஊழியர்களுக்கு தான் இமிகிரேஷன் நிறைய இருக்கும் என்பது இல்லை. சுற்றுலாவுக்கு வந்து நிறைய பேர் வேலை தேடி வருவது சிங்கப்பூரில் சமீபகாலமாக அதிகரித்து இருப்பதால் அவர்களுக்கும் இமிகிரேஷனில் கெடுப்பிடிகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் லட்சங்களில் சம்பளம் கொடுக்கும் EPass… அப்ளே செய்ய என்னென்ன டாக்குமெண்ட்ஸ்… இதை தெரிஞ்சிக்கோங்க முத!
சமீபத்தில் தான் சிங்கப்பூரில் இருந்த அனைத்து கோவிட் கட்டுபாடுகளும் தளர்த்தப்பட்டது. அதனால் pcr டெஸ்ட் குறித்த பயம் உங்களுக்கு தேவையே இல்லை. இதனால் முன்னேற்பாடாக நீங்க எந்தவிதமான டெஸ்ட்டும் எடுக்க தேவையில்லை. இது pcm permit ஊழியர்கள் துவங்கி epass, tourist visa உள்ளிட்ட அனைவருக்குமே பொருந்தும்.
தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்:
முதலில் எந்தவிதமான வொர்க் பாஸ் மற்றும் விசாவில் இருந்தாலும் வேலிடிட்டி இருக்கும் பாஸ்போர்ட் வைத்து இருக்க வேண்டும். அதில் உங்களின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் தெளிவாக இருக்க வேண்டும். மேலும் பாஸ்போர்ட் குறைந்தது 6 மாதத்திற்கு செல்லும்படியாகும் படி இருப்பது நல்லது.
அடுத்து, SG Arrival card இதை தற்போது முக்கிய ஆவணமாகவே கருதி வருகிறார்கள். அதனால் நீங்கள் விமான ஏற செல்லும் முன்னர் இதை சரியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். சிலருக்கு கம்பெனியில் இருந்தே எடுத்து கொடுக்கப்படும். சில தருணங்களில் ஊழியரே போட வேண்டும் எனக் கூட சொல்லலாம். அதை ஏஜென்ட்டிடம் பேசி விடுங்கள்.
விமான டிக்கெட் கையில் இருக்க வேண்டும். முக்கியமாக டூரிஸ்ட் விசாவில் வருபவர்கள் கையில் ரிட்டர்ன் டிக்கெட்டும் இருக்க வேண்டும். அதைப்போல கண்டிப்பாக கல்வி சான்றிதழை கையில் வைத்து இருக்க கூடாது. அப்படி இதை தவறும் பட்சத்தில் அடுத்த விமானத்தினை பிடித்து உங்களை மீண்டும் இந்திய விமானத்தில் அனுப்பி விடுவார்கள்.
on boarding slot புக் செய்து இருக்க வேண்டும். இது புதிதாக வேலைக்கு வரும் ஊழியர்களுக்கு பொருந்தும். லீவில் சென்று சிங்கப்பூர் திரும்பும் ஊழியர்களுக்கு தேவைப்படாது. ஸ்லாட் புக் செய்த மையத்திற்கு செல்லும் போது IPA, On boarding slot புக் செய்த மெயில், தடுப்பூசி சான்றிதழ், ஸ்மார்ட் போன் உள்ளூர் சிம்முடன் இருக்க வேண்டியதும் அவசியம்.
வேலைக்கு வரும் ஊழியர்கள் விசாவுடன் கையில் கம்பெனியின் பாண்ட் பேப்பரும் இருக்க வேண்டும். இதை பெரும்பாலான நிறுவனங்கள் விமானம் ஏறும் போது கையில் கொடுப்பதாக கூறப்படுகிறது. இவை அனைத்தினையும் பிரிண்ட் செய்து வைத்து கொள்ளுங்கள். மொபையில் காட்டும் எண்ணத்தில் விமான நிலையம் செல்ல வேண்டாம்.
“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெற எங்களது முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க”