TamilSaaga

பெற்றோர் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் : எதிர்பாராத விதத்தில் மனைவி பலி – இரண்டே மணி நேரத்தில் கணவனும் ரயிலில் பாய்ந்து தற்கொலை

ஒரு மனிதன் உடலால் அனுபவிக்கும் வலி எவ்வளவு கொடியதோ அதே அளவிலான வலி தான் அவன் மனதால் அனுபவிப்பது. இதை உண்மையாகியுள்ளது சேலத்தில் நடந்த ஒரு சம்பவம், தான் காதலித்து கரம் பிடித்த மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி என்ற ஊர்க்கு அருகே உள்ளது தான் தம்பநாயக்கன்பட்டி.

Breaking: செம மாஸ்! சிங்கப்பூருக்கு “Airbus A 321 neo” எனும் பிரம்மாண்ட விமானங்களை இயக்கும் Fly Scoot – திருச்சியில் இருந்து மார்ச் 27 முதல் “டக்கர்” பயணம் ரெடி!

அந்த ஊரை சேர்ந்தவர் தான் ரவிக்குமார், டிப்ளமோ படித்தவரான அவர் தனது ஊரில் ஒரு மெக்கானிக் ஷாப்பில் பணிபுரிந்து வந்துள்ளார். ஒரு காலகட்டத்தில் இவருக்கும் இவருடைய நண்பரின் தங்கையான சரண்யா என்பவருக்கும் காதல் மலர இறுதியில் அது கல்யாணத்தில் முடிந்தது. ரவிக்குமார் பற்றி நன்கு அறிந்த அவரது நண்பர் தனது தங்கையை முழுமனதுடன் தாரைவார்த்துக்கொடுத்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த கல்யாணம் அந்த காதல் ஜோடிக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

அருமையான நண்பன், ஆசை மனைவி, சிறந்த குடும்பம் என்று ரவிக்குமாருக்கு வாழ்க்கை நகர, சரண்யாவிற்கு மட்டும் ஒரு சிறு உறுத்தல் இருந்துவந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது தந்தையின் நினைவாகவே இருந்துவந்துளளர் சரண்யா. பெண் பிள்ளைகள் பொதுவாக தந்தையிடம் கொஞ்சம் அதிக பாசத்தோடு தான் இருப்பார்கள். தந்தையின் பிரிவை தாங்காமல் வாழ்ந்துவந்த சரண்யாவிற்கு அவ்வப்போது வயிற்றுவலி வர தொடங்கியுள்ளது.

ரவிக்குமாரும் பல டாக்டர்களிடம் அழைத்து சென்று வந்துள்ளார், ரவிக்குமாரின் ஆறுதல் வழியாக அந்த வலியை தாங்கிக்கொண்ட சரண்யா கடந்த வியாழன் அன்று ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளார். ரவிக்குமார் வேலைக்கு சென்றதும் வயிற்றுவலி அதிகமான நிலையில் ஒரு கட்டத்தில் வலி தாங்கமுடியாமல் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். செய்தி அறிந்து பதறியடித்து வீட்டுக்கு ஓடிவந்த ரவிக்குமார் மனைவியின் உடலை பார்த்தது அதிர்ச்சியில் உறைந்தார். போலீசார் வரவழைக்கப்பட்டு சரண்யாவின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

அவர் உடல் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது நான் வீட்டுக்கு சென்று உடனே திரும்பி வருகின்றேன் என்று கூறி சென்ற ரவிக்குமார் சேலம் கரூர் ரயில் பாதையில் படுத்து தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். தலை தனியாக, உடல் தனியாக அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது இறுதியில் சரண்யா உடல் பிரேதபரிசோதனைக்காக வைக்கப்பட்ட அதே இடத்தில் ரவிக்குமாரின் உடலும் வைக்கப்பட்டது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. நீ சென்ற இடத்திற்கு நானும் வருகின்றேன் என்று ரவிக்குமார் கூறிச்சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

“ஹெல்ப் பண்ணுங்க”.. சிங்கப்பூரில் விபத்தில் சிக்கிய தந்தை ICU-வில் – CCTV இல்லாததால் மக்களின் உதவியை நாடும் மகள்

தான் ஆசையோடு காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவி இறந்த இரண்டு மணிநேரத்தில் கணவரும் தற்கொலை செய்துகொண்டது சேலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts