கம்பெனியின் ஊழியர்கள் அனைவருமே தங்கள் திருமணத்துக்கு முதலாளிகளை அழைப்பது வழக்கம் தான். பெரும்பாலான முதலாளிகள் அதனை அப்படியே தள்ளி வைத்து விடுவார்கள். சிலர் வேறு யாரையும் அனுப்பி வைப்பார்கள். ஆனால் சிங்கப்பூரில் வேலை செய்யும் ஒரு ஊழியர் திருமணம் அவரின் சொந்த நாட்டில் நடந்ததற்கு அந்த கம்பெனி முதலாளியே ஆச்சரிய எண்ட்ரி கொடுத்த தகவல்கள் தான் தற்போதைய சமூக வலைத்தளங்களின் வைரல் நிகழ்வாகி இருக்கிறது.
தமிழ்நாட்டின் புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் தான் மாரிமுத்து. இவர் சிங்கப்பூரில் அமைந்திருக்கும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் கடந்த 17 வருடமாக வேலை செய்து வருகிறார். இதையடுத்து, இவருக்கும் நித்யா என்ற பெண்ணுக்கு திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் பிப்.23ந் தேதி நடைபெறும் என தேதி குறிக்கப்பட்டது.
இந்த திருமணத்துக்கு தன்னுடைய முதலாளியும், தொழிலதிபருமான கெல்வின்யாவிற்கு அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் மாரிமுத்து. ஆனால் முதலாளி வருவார் என்ற நம்பிக்கை இருந்ததா எனக் கேட்டால் சந்தேகமே. திருமண நாளும் வந்தது. மணமக்களை அசீர்வதிக்க தமிழ் பாரம்பரிய உடையாக வேட்டி, சட்டையை கட்டி வந்த கெல்வின்யாவை பார்க்க அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
ஊரின் எல்லையில் இருந்து குதிரை வண்டியில் அமர வைத்து செண்டாமேளம் முழங்க மாரிமுத்துவின் உறவினர்கள் கெல்வின்யாவை தடபுடலாக வரவேற்று அழைத்து வந்தனர். திருமணத்தில் முழுதாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பந்தியில் அமர்ந்து உணவருந்திய படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் காணாமல் போன தமிழக ஊழியர்… 8 நாட்கள் கழித்து சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல்… உட்கார்ந்த நிலையில் உயிரை விட்ட கபடி வீரர்..!
இதை தொடர்ந்து, கெல்வின்யா அந்த ஊரில் இருந்த ஊராட்சி பள்ளியினை பார்வையிட்டவர். பள்ளியின் வளர்ச்சிக்காக 50 ஆயிரம் நன்கொடை கொடுத்ததாக கூறப்படுகிறது. சாதாரண ஊழியர் என்று புறம் தள்ளாமல் சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டு வரை சென்ற முதலாளியின் செயலால் அனைவரும் நெகிழ்ச்சியில் இருப்பதாக கூறிப்பிடுகின்றனர்.