TamilSaaga

“இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்த பெண்மணி” : 26 முறை கத்தியால் குத்திய பணிப்பெண் – என்ன நடந்தது?

சிங்கப்பூரில் தனது முதலாளியின் மாமியாரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பணிப்பெண் ஒருவர், சமையலறையிலிருந்து கத்தியை எடுத்து அந்த மாமியாரை 26 முறை குத்தி, அதன்மூலம் அவரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூன் 25, 2018 அன்று நண்பகல் வேளையில் இருந்தபோது 70 வயதுப் பெண்ணைக் கொலை செய்ததாக மியான்மர் நாட்டைச் சேர்ந்த 26 வயதான Zin Mar Nwe மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பின்னர் அவர் சிங்கப்பூரின் மேற்கு பகுதியில் சுற்றித் திரிந்த அந்த பெண், பணிப்பெண் ஏஜென்சிக்குச் செல்வதற்கு முன்பு அங்கு வைத்து கைது செய்யப்பட்டார். இந்த கொலைக்கான விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 9) தொடங்கியது. Zin Mar Nwe ஜனவரி 2018ல் சிங்கப்பூர் வந்து அந்த ஆண்டு மே 10 அன்று குறிப்பிட்ட அந்த குடும்பத்திற்காக வேலை செய்யத் தொடங்கினார் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறியது.

அந்த பணிப்பெண்ணின் முதலாளியின் மாமியார், சிங்கப்பூரில் உள்ள தனது குடும்பத்துடன் ஒரு மாத காலம் தங்குவதற்காக அந்த ஆண்டு மே மாதம் 26ம் தேதியன்று இந்தியாவிலிருந்து வந்தார் என்றும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றது. இறந்தவர் குறித்தும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சம்பவம் நடந்த இடம் ஆகியவற்றை GAG ஆர்டர் காரணமாக அடையாளம் காட்ட முடியவில்லை. ஜூன் 25, 2018 அன்று காலை 11.30 மணியளவில் பணிப்பெண்ணும் அந்த பெண்மணியும் தனியாக குடியிருப்பில் இருந்தனர்.

அப்போது, ​​வயதான பெண் அறையில் சோபாவில் படுத்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.
பின்னர் சின் மார் நிவே சமையலறையில் இருந்து கத்தியை எடுத்து அந்த பெண்ணை பலமுறை குத்தி கொன்றார் என்று கூறப்படுகிறது. பின்னர் சமையலறையில் கத்தியைக் கழுவிவிட்டு, துணிகளை மாற்றிக்கொண்டு பிளாட்டில் இருந்து எடுத்த சிறிது பணத்துடன் அந்த யூனிட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
மதியம் 12.40 மணியளவில் அவர் சோவா சூ காங்கில் உள்ள பணிப்பெண் ஏஜென்சிக்கு சென்று தனது பாஸ்போர்ட்டைப் பெற முயன்றதை பாதுகாப்பு கேமரா காட்சிகள் காட்டியுள்ளது.

செவ்வாயன்று, நீதிமன்றத்திற்கு வந்த Zin Mar Nwe, பாதிக்கப்பட்ட பெண்ணால் துன்புறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அவர் தனது முதுகு மற்றும் தலையில் தாக்கியதாகக் அந்த பணிப்பெண் கூறினார். சில சமயங்களில் பாத்திரங்களைப் பயன்படுத்தி தாக்கினர் என்றும், மேலும் அவரது நகங்களை வெட்டும்போது பாதிக்கப்பட்டவர் தனது மார்பில் உதைத்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தையும் அவர் காவல்துறையிடம் விவரித்தார். சின் மார் நிவே, தான் மிகவும் கோபமாக இருப்பதாகவும், கத்தியைப் பிடித்ததால் மனம் வெறுமையாகிவிட்டதாகவும் காவல்துறையிடம் கூறியிருந்தார்.

அவர் மீது சாட்டப்பட்டுள்ள கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரணதண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Related posts