TamilSaaga

ஏஜென்ட்டை தேடி பிடிச்சு வேலை தேட சொல்ல போறீங்களா… லட்சங்களில் செலவழிக்கும் முன்னர் Easyஆ Skillஐ முடிக்க இந்த டெஸ்ட் அடிங்க… சம்பளமும் எக்கசக்கமாக இருக்கும்

சிங்கப்பூரில் வேலையில் இருக்கும் ஊழியர்களுக்கு பெரிய சம்பளம் வேண்டும் என்ற ஆசை இருக்கும். அது போலவே சிங்கையிலேயே பல வருஷம் வேலை செய்ய ஆசையும் இருக்கும். இதற்கு வரப்பிரசாதமாக இருப்பது தான் Skilled டெஸ்ட். இதில் ஏகப்பட்ட துறைகள் இருக்கிறது. நீங்க படித்த துறைகளிலையோ அல்லது அனுபவம் இருக்கும் துறைகளிலோ வேலைக்கு செல்ல முடியும்.

முதலில் இதற்காக நீங்க ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதற்காக தமிழ்நாடு இன்ஸ்டியூட்கள் அட்மிஷன் போட்டு 45 முதல் 60 நாட்கள் பயிற்சி எடுத்து இருக்க வேண்டும். இந்த skill தேர்வுகளிலையே ரொம்பவே பிரபலமானது Plumbing மற்றும் pipe fitting. இந்த Skillஐ எப்படி முடிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ள இப்பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: ஏஜென்ட்டிடம் பல லட்சம் கொடுத்து சிங்கப்பூர் வர இருக்கீங்களா? உங்களிடம் இந்த திறமை இருந்தாலே போதும்… செம வேலையில் செட்டில் ஆகிடலாம்… குடும்ப கஷ்டமும் பஞ்சா பறந்துடுமாம்

தமிழ்நாட்டில் ஒரு நல்ல ஸ்கில் இன்ஸ்டியூட்டினை தேர்வு செய்து அங்கு அட்மிஷன் போடுங்கள். பயிற்சி பொதுவாக plumbing மற்றும் pipe fitting வேலைகளை பொறுத்தே அமைந்து இருக்கும். இதற்கு மெயின் டெஸ்ட்டின் ப்ராஜெக்ட் முழுமையாக ஒரு பாத்ரூம் ரெடி செய்வதை வைத்தே இருக்கும். பயிற்சிகளில் ப்ளாஸ்டிக் பைக் வைத்து சொல்லி தரப்படும். ஆனால் தேர்வில் copper பைப்பில் ஃபிட்டிங் செய்ய வேண்டும்.

மெயின் தேர்வில் எப்போதும் போல ஒரு மணி நேரம் எழுத்து தேர்வு இருக்கும். சாய்ஸ் டிக் செய்வது போல 25 கேள்விகள் கேட்கப்படும். அதில் 16க்கு பதில் அளித்தாலே பாஸ் தான். அதனை தொடர்ந்து பிராக்டிக்கல் எக்ஸாம் இருக்கும். 4 மணி நேரம் பிராக்டிக்கல் நடக்கும். 2 மணி நேரம் முடிந்து ஒரு ப்ரேக் கொடுக்கப்படும்.

இதையும் படிங்க: நீங்க Construction துறையில் வேலை தேடுறீங்களா… சிங்கப்பூரில் எவ்வளவு சம்பளம் கிடைக்கும்… இத தெரிஞ்சிக்கோங்க செம ஐடியா கிடைக்கும்!

எத்தனை பிராஜெக்ட் இருந்தால் வரைப்படம் மற்றும் அளவீடுகள் மட்டுமே மாறுப்படும். மாடல் கொடுக்கப்பட்டு இருந்த பேப்பரை வைத்து சரியாக ஃபிட் செய்யப்பட்ட பைப்புகள் ஒழுகாமல் கழன்று விழுகாமல் இருந்தாலே நீங்கள் ஸ்கிலில் பாஸ் ஆகிவிடலாம். மேலும் பெரும்பாலும் மெயின் டெஸ்ட்டில் நீங்கள் செய்யும் பிராக்டிக்கலுக்கு மட்டுமல்லாமல் பாதுகாப்பு கவசங்களையும் நடுவில் கழற்றக்கூடாது. அடிப்படுதல் ஆகியவை கூட உங்கள் தேர்வில் ஃபெயில் ஆக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts