TamilSaaga

சிங்கப்பூரில் காணாமல் போன தமிழக ஊழியர்… 8 நாட்கள் கழித்து சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல்… உட்கார்ந்த நிலையில் உயிரை விட்ட கபடி வீரர்..!

தமிழ்நாட்டின் ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்தவர் கணேஷ் குமார். இவர் சிங்கப்பூரில் ஒரு ஐடி நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். தனக்கு பிறந்த இரண்டாவது குழந்தையை பார்க்க விரைவில் தமிழ்நாடு செல்ல வேண்டும் என நினைத்திருந்த கணேஷ் குமாரின் இறப்பு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சிங்கப்பூரில் படிக்கட்டை பயன்படுத்தும் பழக்கமே இல்லை. இதுவே இவருக்கு எமனாகி இருக்கிறது. 10 நாட்களுக்கு முன்னர் காலையில் வேலைக்கு வந்தவருக்கு திடீரென உடல் நிலையில் ஏதோ மாறுபாடு தோன்றியது. அதனால் தன்னுடைய சக டிரைவர் ஒருவரை அந்த ஷிப்ட்டில் மாற்றி விட்டார்.

அந்த ஐடி நிறுவனத்தில் இருந்த படிக்கட்டில் ஓய்வெடுக்க அமர்ந்து இருக்கிறார். ஆனால் அங்கையே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி இருக்கிறார். யாரும் அருகில் இல்லாததால் அவருக்கு முதலுதவி கொடுக்கப்படவில்லை. சின்ன மாரடைப்பு என்றாலும் சரியான நேரத்தில் சிகிச்சை கொடுக்கப்படாததால் அப்போதே அவர் இறந்தும் விட்டார்.

இதையறியாத, குடும்பத்தினரும் நண்பர்களும் இவரை காணவில்லை என தெரிந்த இடங்களில் எல்லாம் தேடி இருக்கிறார்கள். சொந்த ஊருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு அவர் வரவில்லை என தகவல் கிடைத்தது. 8 நாட்கள் கடந்தபின்னர் அவரின் உடல் அழுகி நாற்றம் வெளியில் வந்தது.

உடனே அங்கு இருந்த படிக்கட்டை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்ததாம். 8 நாட்கள் கடந்ததால் அவரின் முழு உடலும் அழுகி சிதைந்து எலும்புகள் வெளியில் தெரியும் அளவுக்கு கிடைத்தது. இதனால் அவரின் இறுதிச்சடங்குகள் சிங்கப்பூரிலேயே நடத்தப்பட்டு விட்டது. கடல் கடந்து வேலைக்கு சென்று அங்கையே தனது உயிரை விட்ட கணேஷ் குமாரை நினைத்து அவர் குடும்பமே கலங்கி நிற்கிறார்கள். முதலில் ஒரு பெண் குழந்தைகள் இருக்கும் இவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை ஒன்று சமீபத்தில் தான் பிறந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கபடி வீரரான கணேஷ் குமார் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர். இத்தனை சின்ன வயசில் இறந்து விட்டாரே என அவரின் நண்பர்கள் கதறியது அங்கிருந்த பலருக்கும் கண்ணீரை வரவழைத்தது.

Related posts